பக்கம்:பர்மா ரமணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் குணம் 27 திருடிக் கொடுக்கவில்லையே! எனக்காகத் தந்த இட்டலி களைத்தானே அவளுக்குக் கொடுத்துவிட்டு கான் பட்டினி கிடக்கிறேன்' என்றேன். என் பேச்சைக் கேட்டதும் அவரது கோபம் அதிக மாகிவிட்டது, டேய், யாரை ஏமாற்றப் பார்க்கிருய்? உனக்குத் தந்த இட்டலிகளைத் தானம் செய்துவிட்டு நீ இப்போது பட்டினி கிடப்பதாகச் சொல்கிருய், உண்மைதான். ஆணுல், மத்தியானம் சாப்பிடும்போது இந்த வேளைக்கும் சேர்த்தல்லவா மூக்குப் பிடிக்கச் சாப் பிடப் போகிருய்? அப்போது யாருக்கு கஷ்டம்? எனக் குத்தானேடா இதே போல் எத்தனே தடவை செய்திருக் கிருயோ திருட்டுக் கழுதை என்று என்னைத் திட்டி ஞர். அவர் என்னைத் திருடன் என்று சொன்னது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தது. பேசாமல், அன்றே-அந்த நிமிஷமே அவர் வீட்டைவிட்டே வெளி யேறிவிட்டேன். 'பிறகு, நான் எங்கெங்கோ வேலைக்கு அலைந்தேன். கடைசியாக ஒரு பலசரக்கு மண்டியில் வேலை கிடைத் தது. அந்த முதலாளியிடம் ஒரு கணக்கப்பிள்ளை இருந்தார். அவர் இருபது வருஷ காலமாக அவரிடம் வேலை பார்த்துவந்தார். அன்று ஒருநாள் கணக்கப் பிள்ளையின் பெயருக்கு ஒர் அவசரத் தக்தி வந்தது. அப்போது அவர் கடையில் இல்லை. பாங்கிலே பணம் கட்டப் போயிருந்தார். முதலாளியே கையெழுத்துப் போட்டுத் தக்தியை வாங்கினர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனல், தந்திச் சேவகரிடமே அதைக் கொடுத்துப் படித்துக் காட்டச் சொன்னர். தந்திச் சேவகர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு த்ஸ்ெள, த்ஸ்ெள, பாவம்! உங்கள் கணக்கப்பிள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/30&oldid=808188" இலிருந்து மீள்விக்கப்பட்டது