பக்கம்:பர்மா ரமணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பர்மா ரமணி யின் தாயார் இறந்து விட்டார்களாம். உடனே புறப் பட்டு வரவும் என்று இருக்கிறது என்ருர் சரிதான் என்று கூறித் தந்தியை வாங்கிப் பெட்டிக்குள்ளே வைத்தார் முதலாளி, தக்திச் சேவகர் போனதும் என்னை அவர் அரு கிலே அழைத்தார். அப்போது நானும் அவரும்தான் இருந்தோம். டேய், ரமணி! இந்தத் தந்தி வந்த விஷயத்தைக் கணக்கப்பிள்ளையிடம் சொல்லவே சொல் லாதே. எழுதவேண்டிய கணக்குகளெல்லாம் ஏராள மாக இருக்கின்றன. கணக்கப்பிள்ளை இன்றைக்கே ஊருக்குப் போய்விட்டால், திரும்பிவரப் பத்துப் பதி அனந்து காளாகும். மூன்று நாளிலே கணக்குகளை யெல்லாம் எழுதி முடித்துவிடுவான். அப்புறம் சொல்ல லாம் என்ருர்.

இதைக் கேட்டதும் கான் திடுக்கிட்டேன். என்ன இது! உங்களிடம் இருபது வருஷமாக வேலை பார்த்து வருகிருர் அந்தக் கணக்கப்பிள்ளை. அவரைப் பெற்று வளர்த்த தாயார் இறங் هنا تدولتي தாக அவசரத் தந்தி வந்திருக்கிறது. இறக்கும் சமயத்தில்தான் அவர் அம்மாவின் அருகிலே இல்லை; இறந்த பிறகாவது அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டாமா? உங்கள் வேலைதான் பெரிது என்கிறீர்களே! என்று ஆத்திரத் துடன் கேட்டுவிட்டேன்.

கான் கூறியதைக் கேட்டு அவர் கோபம் கொண் உார். டேய், அதிகப் பிரசங்கி! நீ அவனிடம் இதைப் பற்றி ஏதாவது சொன்னல், உடனே உன்னை வேலையை விட்டே விரட்டி விடுவேன்' என்று மிரட்டினர்.

  • உடனே கான் அவரிடம்; சிரமப்பட்டு நீங்கள் விரட்டவேண்டாம். நானே போய் விடுகிறேன். ஆன
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/31&oldid=808190" இலிருந்து மீள்விக்கப்பட்டது