பக்கம்:பர்மா ரமணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் குணம் 23) லும், உடனே பாங்குக்குப் போய்க் கணக்கப்பிள்ளை யிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறேன் என்று கூறிப் புறப்பட்டேன். நேராக பாங்கிற்குப் போனேன். கணக்கப்பிள்ளை யிடம் அந்தத் துக்கச் செய்தியைக் கூறிவிட்டு, அந்த ஊரைவிட்டே புறப்பட்டேன். நேராக இந்தப் பட்டனத் துக்குத்தான் வந்தேன்.' இவ்வளவு நேரமாக ரமணி கூறியதைக் கேட்ட தும், மதுரகாயகத்துக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஒரு சிறு பையன். இவனுக்கு எவ்வளவு பரோபகார சிந்தனே! என்று வியந்தார். பிறகு புன் சிரிப்புடன், ரமணி, நீ சொல்லுவதெல் லாம் சரிதான். இருந்தாலும், காலத்தை ஒட்டி, நமது கிலேமையை அனுசரித்துப் போக வேண்டியதுதான்... ஆமாம், நீ சொல்வதைப் பார்த்தால் உனக்கு ஒருவரின் ழேயிருந்து வேலை பார்க்கப் பிடிக்காது போல் தெரி கிறதே!’ என்று கேட்டார் மதுரகாயகம். அதற்கு ரமணி கண்கலங்கப் பின்வருமாறு கூறி ன்ை: 'எனக்கு ஒருவரின் கீழ் வேலை செய்யக்கூடாது என்பதில்லை, சார். யாரேனும் வேலை கொடுத்தால், கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்வேன். பொய் சொல்லமாட்டேன். திருடமாட்டேன். என்னைப் பற்றி நானே சொல்லுகிறேனே என்று கினைக்காதீர்கள். சிபாரிசு செய்ய எனக்கு வேறு யார் இருக்கிருர்கள்? நானே அைைத' - - உடனே மதுரகாயகம், சரி, வருத்தப்படாதே; எங்கள் சபா முதலாளியிடம் சொல்லிப் பார்க்கிறேன். அவர் உன்னை எடுத்துக்கொள்ளலாம். இதற்காகத் தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்” என்ருர், 1501-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/32&oldid=808191" இலிருந்து மீள்விக்கப்பட்டது