பக்கம்:பர்மா ரமணி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுடி அறை s . 64 எப்படி இங்கே வந்தது என்பது தெரியவில்லை. அதை நான் திரும்பப் பெற வேண்டுமானல் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து சொல்ல முடியுமா?’ என்று கேட்டார் மதுரநாயகம். 'எப்போது காணுமல் போனது, எங்கிருந்து காணுமல் போனது, அது உங்களுடையதுதான் என்ப தற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா என்பதை யெல்லாம் விவரமாக எழுதிக் கொடுங்கள். கான் உடனே எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அந்தப் பேணு வந்ததோ, அங்கு உங்கள் மனுவை அனுப்பு கிறேன். அவர்கள் விசாரிக்க வேண்டியவர்களை விசா ரித்துத் தகவல் அனுப்புவார்கள். பிறகு உங்களுக்குக் கடிதம் அனுப்புவோம். நீங்கள் வந்து பேணுவைப் பெற்றுக் கொள்ளலாம்” என்ருர் அதிகாரி. 'இப்போதே மனு எழுதித் தரலாமா?’ என்ருர் மதுரகாயகம். எழுதிக் கொடுங்களேன். வெள்ளைக் காகிதம் வேண்டுமா? வேண்டாம் சார், என்னிடம் லெட்டர் பேப்பர் இருக்கிறது. அதில் எழுதித் தருகிறேன்' என்று கூறி விட்டு, கையிலிருந்த தோல் பையைத் திறந்தார் மதுர்நாயகம் உள்ளேயிருந்து அவருடைய பெயர். விலாசம் அச்சிட்ட கடிதக் காகிதத்தை எடுத்தார். அதில் பேணுவின் அடையாளம், அது எங்கிருந்து எப்போது காணுமல் போனது என்ற விவரம், திருடிப் போன ரமணியின் அங்க அடையாளங்கள் முதலிய வற்றைக் குறிப்பிட்டார். அத்துடன் அந்தப் பேணு சிங்கப்பூரிலிருந்து பார்சலில் வந்தது என்றும், சேகர் 1501-5 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/64&oldid=808311" இலிருந்து மீள்விக்கப்பட்டது