பக்கம்:பர்மா ரமணி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுடி அறை 63 கிறீர்கள். ஆனல் ரமணிப் பயல் நம் நாடகக் கொட்டகைக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷ ளிைல் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். இந்தப் பட்ட ணத்தில்தான் B, B1, B2, B-3, B-4 என்று ஆரம் பித்து K, K-1, K-2, K-3, K-4, வரை கிட்டத்தட்ட ஐம்பது போலீஸ் ஸ்டேஷன்கள் இருப்பதாகத் தெரி கிறதே! ரமணியை இந்தப் போலீஸ் ஸ்டேஷ்னுக்குப் பிடித்து வந்தபோது அவன் கையில் பேணு மட்டுமே இருந்திருக்க வேண்டும். கடிகாரத்தை அவன் எங்கோ ஒளித்து வைத்திருக்கவேண்டும் அல்லது விற்றிருக்க வேண்டும். இந்தப் பேணு யாருடையது?’ என்று கேட்டிருப்பார்கள். அவன் உள்ளதைச் சொல்லியிருக்க மாட்டான். சொன்னுல்தான் உடனே இங்கு கூட்டிக் கொண்டு வந்திருப்பார்களே! அப்போது அவனுக்கு எப்படி இருக்கும்? அவமானமா யிருக்குமல்லவா ? அது மட்டுமா? நானும் என் கடிகாரத்தைப் பற்றிக் கேட்காமல் விடுவேன? அதற்கும் பதில் சொல்லி ஆக வேண்டுமே? அதனல், பேணு எங்கோ வழியில் கிடந்த தாக அவன் சரடு விட்டிருப்பான்......” முதலாளி மோகனரங்கம் இப்படிக் கூறிக்கொண் வடிருக்கும் போதே, அப்படியானல்......கீழே கிடந்த தாகக் கூறி என் பேணுவைப் போலீஸில் கொடுத்து விட்டு ரமணி தப்பித்துக்கொண்டிருப்பானே! என்ருர் மதுரநாயகம். யார் கண்டது: ஒருவேளை அவன்மீது சந்தேகப் பட்டு அடைத்துவைத்திருந்தாலும் இருக்கலாம். எதற் கும் நாளே சாயங்காலம் கட்டாயம் போய்ப் பார்த்து விடுங்கள். அந்த ரமணிப் பயல் அங்கே இருந்தால் என் கடிகாரத்தைப் பற்றியும் கேளுங்கள். மறந்து விடாதீர்கள்!” என்ருர் மோகனரங்கம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/66&oldid=808313" இலிருந்து மீள்விக்கப்பட்டது