பக்கம்:பர்மா ரமணி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பர்மா ரமணி. மறுநாள் மாலை மணி நாலு இருக்கும். மானேஜர் மதுரநாயகம் புறப்பட்டுத் தபாலாபீஸ் அருகேயுள்ள போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்ருர், அங்கே சென்ற தும், சப்-இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைக் கூறிஞர். ஒஹோ அது நீங்கள்தா:ை ஆமாம், நீங்கள் சொல்வதற்கும், பேணுவைக் கொடுத்த ஆசாமி சொல் வதற்கும் சம்பந்தமே இல்லையே!” என்று கூறினர் சப்-இன்ஸ்பெக்டர். அது எப்படி சார் இருக்கும்? திருடிக்கொண்டு வந்தவன் உண்மையையா சொல்லுவான்? "ஆத்திரப்படாதீர்கள்! இப்போது பேசாமல் வீட் டுக்குப் போங்கள். நாளைக் காலேயில் கான் ஆள் அனுப்புகிறேன். அப்போது வந்தால் விவரமாகப் பேசி முடிவு செய்யலாம்' என்று கூறினர் சப்-இன்ஸ் பெக்டர். 'ஏன் சார், பேணுவைக் கொடுத்தது யார்? அவன் எங்கே இருக்கிருன்?”

அதெல்லாம் இப்போது சொல்லக்கூடாது. சொன் ஞல், உடனே நீங்கள் போய் அந்த ஆசாமியைப் பார்த்து, உங்களுக்குச் சாதகமாகப் பேசச் சொல்லி விட்டால் என்ன செய்வது?’ என்று சற்றுக் கடுமை யாகக் கூறினர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

'சரி சார், உங்கள் ஆள் வந்ததும் காளைக்கு வரு கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு வந்தார் மிதுரநாயகம். -- - - - நாடக சபா முதலாளியும், கமலாதேவியும் விஷ யத்தைக் கேட்டதும், சரி, நாளே எப்படியும் அந்தப் பயல் அகப்பட்டுக்கொள்வான். சந்தேகமே இல்லை ! என்று முடிவு கட்டிவிட்டார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/67&oldid=808314" இலிருந்து மீள்விக்கப்பட்டது