பக்கம்:பர்மா ரமணி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நல்ல மறதி ! மறுநாள் காஜல மானேஜர் மதுரநாயகம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல் வருமா, வருமா என்று எதிர் பார்த்துக் கொண்டே யிருந்தார். பிற்பகல் மணி ஒன்று இருக்கும். அப்போது சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவரைக் கண்டதும், யார் வேண்டும் ?” என்று கேட்டார் மதுரகாயகம்

  • நாடக சபா மானேஜரை சப்-இன்ஸ்பெக்டர் கையோடு அழைத்துவரச் சொன்னர் ” என்ருர் போலீஸ்காரர்.
நான்தான் மானேஜர் காலையிலிருந்து எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். இதோ நேராக வரு கிறேன் ” என்ருர் மதுராாயகம்.
  • சீக்கிரம் வாருங்கள். கான் முன்னுல் போய்ச் சொல்லுகிறேன் ” என்று கூறிவிட்டு சைக்கிளில் திரும்பிவிட்டார் போலீஸ்காரர்.

மதுரகாயகம் சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள்ளே நுழைந்ததும் அங்கே ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் உயரமாக, நல்ல சிவப்பாக இருந்தார். கதர் ஜிப்பா அணிந்திருந்தார். அவர் ஏதேனும் வேறு வேலையாக வந்திருப்பார் என்று கினைத்தார் மதுர காயகம். ஆல்ை, சப்-இன்ஸ்பெக்டர் அவரைச் சுட்டிக் காட்டி, என்ன மிஸ்டர் மதுரநாயகம், இவரை உங் களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/68&oldid=808315" இலிருந்து மீள்விக்கப்பட்டது