பக்கம்:பர்மா ரமணி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல மறதி: 67. இல்லை. அவசரமான வேலை இருந்தால்தான போவேன் ’ என்று பதிலளித்தார் மதுரகாயகம். o "சமீபத்தில் எப்போதாவது நீங்கள் போனது. உண்டா ?” சென்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் என் அம்மா வுக்கு மணியார்டர் செய்யப்போனேன். ' . . . . . . உடனே மணியார்டர் செய்துவிட்டுத் திரும்பி விட்டீர்களா ? அல்லது காத்திருந்தீர்களா ?” es க்யூ வரிசையில் சுமார் அரை மணி கேரம் காத் திருந்தேன். '

  • காத்திருந்து உங்கள் முறை வந்ததும் மணியார் டர் செய்தீர்கள். அப்படித்தானே ?'

இல்லை. மணியார்டர் செய்யப்போன சமயம் எங்கள் சபா முதலாளி அவசரமாக என்னே அழைத்து வரச் சொன்னதாக ஒரு பையன் ஓடிவந்து சொன்னன். உடனே நான் மணியார்டர் செய்யாமலே திரும்பி விட்டேன். க்யூவில் கிற்கும்போது யாராவது உங்களிடம் பேணுக் கேட்டதுண்டா ?” - இதைக் கேட்டதும், மதுரநாயகம் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, அடே இப்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது, சார் ! அப்போது ஒருவர் மணியார்டர் பாரம் பூர்த்தி செய்ய வேண்டுமென்று பேணுக் கேட்டார். கொடுத்தேன். திரும்பி வாங்குவதற்குள் அந்தப் பையன் வந்து கூப்பிட்டுவிட்டான்... ' என்று சொல்லிவிட்டு, மேலும் ஏதோ சொல்லப் போளுர் அதற்குள் அந்த சப்-இன்ஸ்பெக்டர், யாரிடம் பேனவைக் கொடுத்தீர்கள் : அந்த ஆள் பத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/70&oldid=808318" இலிருந்து மீள்விக்கப்பட்டது