பக்கம்:பர்மா ரமணி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல மறதி #9 கைக்கு எப்படி வந்தது என்பதை விவரமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன் ” என்ருர் ஜிப்பாக்காரர். இதைக் கேட்டதும், நீங்கள் மிகவும் தங்கமான வர், சார் இல்லாத போனல், தங்கமூடி போட்ட என் பேணுவை இப்படிக் கொண்டு வந்து கொடுப்பீர்களா ? வேருெருவராயிருந்தால், பேணு திரும்பியே வராது ! ரமணிதான் திருடிவிட்டான் என்று சொல்லிக் கொண்டே இருப்போம். நல்ல காலம், உங்கள் பெயர் என்ன சார் ? என்று கேட்டார் மதுரநாயகம். அந்தக் கேள்விக்கு சப்-இன்ஸ்பெக்டரே பதில் சொன்னுர், இவர் பெயரா? தங்க மூடி போட்ட உங்கள் பேணு வைக் கொண்டுவந்து தந்த இவர் பெயரே தங்கவேலு தான்... ! சரி, இப்போது உங்கள் சந்தே கமெல்லாம் தெளிவாகி விட்டதல்லவா ? அது மதுரகாயகத்தின் பேணுதான். போஸ்டாபீஸில் தங்கவேலுவிடம் கொடுத் ததைத் திருப்பி வாங்காமல் அவசர வேலையாகப் போய் விட்டார். யாரிடம் கொடுப்பது என்று தெரியாததால், தங்கவேலு இங்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டார். மதுரகாயம், மறதியால் தமது வீட்டில் இருந்த ரமணி தான் திருடிவிட்டான் என்று கினைத்துப் போலீஸில் தகவல் கொடுத்தார். இப்போது, அவர் தவறை உணருகிருர் பேணு அவருடையதுதான். அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம்’-இதே போல் போலீஸ். கமிஷனர் ஆபீளிற்கு எழுதி அனுப்பிவிடுகிறேன். மிஸ்டர் மதுரகாயகம், இன்னும் இரண்டு, மூன்று நாட் களில் உங்களுக்குக் கமிஷனர் ஆபீஸிலிருந்து கடிதம் வரும். அதை நேராக எடுத்துக் கொண்டு போய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/72&oldid=808320" இலிருந்து மீள்விக்கப்பட்டது