பக்கம்:பர்மா ரமணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகசியம் ! - . 73. றும் சொல்லவில்லை; உடனே திரும்பிவிட்டான். ஏன் திரும்பின்ை என்று யோசித்துப் பார்த்தேன். பேனு வைக் காணுேம் என்றதும், அவன்தான் எடுத்திருப் பான் என்று கினைத்தேன். இந்த மாதிரி சக்தர்ப்பத்தில், யாருக்கும் அப்படித்தானே கினேக்கத் தோன்றும் ? கிணற்றிலே போட்ட சாமானைக் குளத்திலே தேடுவது போல் போஸ்டாபிளில் இரவல் கொடுத்த பேணுவை அறையிலிருந்து தொலைந்து போய்விட்டதாகச் சொன் னிர்களே ! அது மட்டும் குற்றமில்லையா ? சரி, இது தான் இப்படியாகிவிட்டது. அந்தப் பட்டுத் துணி விஷயம் என்னவாம் ? எனக்கு என்னவோ அவன் கல்லவகைத் தெரியவே இல்லை ” என்று கூறினுள். " ஆமாம் உனக்கு எப்பொழுதும் சந்தேகம்தான். உன்னைப் பார்த்துப் பார்த்து எனக்கும் சந்தேகப் பேய் பிடித்துவிட்டது. அதல்ை வீண் அலைச்சலும், மனக் கஷ்டமும்தான் ஏற்பட்டுவிட்டன” என்ருர் அவர். ஆமாம் : இப்பொழுது அப்படித்தான் சொல்லு வீர்கள் முதலில் நீங்களும் சேர்ந்துதானே திருட்டுப் பட்டம் அவனுக்குக் கட்டினிர்கள் : அப்பொழுதே உங்க ளுக்கு இந்த விவேகம் இருந்திருக்க வேண்டும்." என்று கோபத்துடன் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டாள், கமலாதேவி. அவளுக்கு அதற்கு மேல் பேச விருப்பமில்லை. இரவு மணி பத்து இருக்கும். சாப்பிட்டுவிட்டுப் படுத்த மதுரகாயகத்துக்குத்துக்கமே வரவில்லை.ரமணி. யைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். ரமணி. எவ்வளவு நல்லவன் ! அவன் என்னிடத்தில் எவ்வளவு அன்பாக, பிரியமாக இருந்தான் ! எப்படிக் கண்யமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/76&oldid=808324" இலிருந்து மீள்விக்கப்பட்டது