பக்கம்:பர்மா ரமணி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 பர்மா ரமணி பழகின்ை சொந்தத் தம்பிகூட அவ்வளவு மதிப்பும் மரியாதையும், பாசமும் வைத்திருக்க மாட்டானே ! விணுக அவனைத் திருடன் என்று கூறி முதலாளி விரட்டி விட்டாரே! இப்பொழுது அவன் எங்கே இருக் கிருனுே வழக்கம் போல் இந்த மாதமும் சம்பளம் வாங் கியதும் என்னிடம் தந்து விட்டானே! இப்போது அவன் கையிலே தம்படி கூட இருக்காதே! என்ன பண்ணு வான் ? எப்படிக் காலம் தள்ளுவான் ? என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தார். அவர் படும் அவதியைக் கண்டு கமலாதேவி, * மணி பத்துக்கு மேலாகிறது. இன்னும் துரங்காமல் இருக்கிறீர்களே சொந்த மகனைப் பிரிந்தவர்கள் கூட இப்படி வேதனைப் படமாட்டார்களே !’ என்று அங்க லாய்த்தாள், ஆனால், அவள் வார்த்தைகள் மதுரகாய கத்தின் காதில் ஏறினுல்தானே ? சிறிது கேரம் சென்றது. படுத்திருந்த அவர் திடீரென்று எழுந்து உட்கார்ந்தார். ஐயோ ரமணி மிகவும் ரோஷக்காரணுயிற்றே ! இப்படி வீண் பழி சுமத்தியதை கினைத்து விபரீதமாக அவன் ஏதாவது செய்து கொண்டால்...... ?” என்று கினைத்துக் கலங் கினர் உடனே அவருடைய இரண்டு கைகளும் ஒன்இ! சேர்ந்தன. கூப்பிய கைகளுடன், ' கடவுளே, ரமணி உயிரோடு இருக்க வேண்டும். விபரீதமாக எதுவும் கடந்துவிடக் கூடாது ' என்று கண்களே மூடிப் பிரார்த் தித்தார். அதே சமயம்: யாரோ கதவு தட்டும் சத்தம் கேட். டது. சார் ! சார்!’ என்ற குரலும் அதைத் தொடர்ந்து வந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/77&oldid=808325" இலிருந்து மீள்விக்கப்பட்டது