பக்கம்:பர்மா ரமணி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 பர்மா ரமணி பிரமாதமாயிருக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பிரமாண்டமான காட்சிகளை யெல்லாம் காணலாம். பள பாப்பான உடைகளும், வர்ண விளக்குகளும் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். குழந்தைகளை வைத்து இவ்வளவு பிரமாதமாக நாடகங்களை கடத்துவதற்கு முக்கிய காரணம் யார்? அவரைத் தெரிந்துகொள்ள வேண்டாமா ? அவர்தான் அக்த சபாவின் மானேஜர் மதுரகாயகம். அவரது முயற்சியாலேதான் அந்த சபா இவ்வளவு தூரம் பேரும், புகழும் பெற்றிருக்கிறது! நாடகங்களைத் தேர்ந்தெடுப் பது, அவற்றை ஒழுங்காக கடத்துவது. குழந்தைகளைத் தயார் செய்வது, வரவு செலவுக் கணக்குகளைப் பார்ப் பது, விளம்பரம் செய்வது எல்லாம் மதுரநாயகத்தின் பொறுப்புத்தான். சுருக்கமாகச் சொல்ல வேண்டு. மானுல் மதுரகாயகம் இல்லாவிட்டால், அந்த நாடக சபாவே இல்லை! அன்று செவ்வாய்க்கிழமை நாடகம் கிடையாது. முதல் நாள் திங்கட்கிழமையும் நாடகம் நடக்கவில்லை. மறுநாள் புதன்கிழமைதான் நாடகம். - கடுவே இரண்டு காட்கள் நாடகம் கடக்காததற்குக் காரணம் வேருென்றுமில்லை. ஒரு காடகம் முடிந்து மறு நாடகம் ஆரம்பிப்பதற்கு இடையிலே இரண்டு காட்கள் வேண்டும். முக்திய நாடகத்தில் உபயோ கித்த காட்சி அமைப்புகளை யெல்லாம் அப்புறப்படுத்தி விட்டுப் புது காடகத்துக்கு வேண்டிய காட்சிகளை அமைப்பதற்குத்தான் இரண்டு நாட்கள் வேண்டியிருக் கிறது: கிருஷ்ண லீலா முடிந்து, இப்போது துருவன். நாடகம் ஆரம்பமாகப் போகிறது. அதற்கு வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/8&oldid=808328" இலிருந்து மீள்விக்கப்பட்டது