பக்கம்:பர்மா ரமணி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம்: அவசரம்! 好 ஏற்பாடுகளெல்லாம் வெகு மும்முரமாக நடந்துகொண் டிருந்தன. பகல் மணி இரண்டு இருக்கும். வீட்டுக்குச் சாப் பிடப் போயிருந்த மானேஜர் மதுரநாயகம் திரும்பி வந்தார். மேடையில் எவ்வளவு தூரம் அலங்கார வேலைகள் கடந்திருக்கின்றன என்பதைப் பார்த்து விட்டுத் தம் அறைக்குள் சென்ருர், காற்காலியில் உட்கார்ந்தார். துருவன் நாடகத்துக்கு இன்னும் என் னென்ன சாமான்கள் தேவை என்று யோசனை செய். தார். அவற்றை ஒரு காகிதத்தில் எழுதினர். எழுதி முடித்ததும், கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரண்டரை. உடனே அவருக்கு ஏதோ ஞாபகம் வக் தது. மேஜைமீது இருந்த மணியை கினிங் என்று ஒரு தடவை அடித்தார். ஒரே ஒரு தடவைதான் அடித்தார்: சில ஆபீஸ்களில், கினிங், கினிங், கினிங் என்று மிட்டாய்க்காரனைப் போல் ஓயாமல் மணியை அடித்துக்கொண்டே யிருப்பார்கள். ஆலுைம், ஆபீஸ் பையன் வரமாட்டான். எங்காவது மூலையில் துரங்கிக் கொண்டிருப்பான். அல்லது, சொந்த வேலையாக வெளியே போயிருப்பான். இர ண் டு ம் இல்லாத போனுல், யாருடனுவது அரட்டை அடித்துக் கொண் டிருப்பான். கடைசியில் மணி அடித்தவரே, ஆபீஸ் பையன் செய்ய வேண்டிய வேலையைச்செய்து முடித்துவிடுவார் ! ஆஞ்ல், அங்கேயுள்ள ஆபீஸ் பையன் ரமணி அந்த ரகத்தைச் சேர்ந்தவனல்லன்! மதுர காயகம் ஒரே ஒரு தடவைதான் மணியடித்தார். உடனே, குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/9&oldid=808339" இலிருந்து மீள்விக்கப்பட்டது