பக்கம்:பர்மா ரமணி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகசியம் ! 77 முதல்நாள் ரீகண்டன் முதலாளியைப் பார்த்து மைத்துனனுக்கு ஒரு வேலை வேண்டுமென்று சொன் ஞராம். முதலாளி, ஆபீஸ் பையன் ஞானமுத்து ஒரு வார லீவில் ஊருக்குப் போனவன் இரண்டு வாரமாகி யும் இன்னும் வரவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்க்கிறேன். அவன் வராமல் போனல், உன் மைத்துனனுக்கு அந்த வேலையைக் கொடுத்து விடலாம் என்று சொன்னுராம். அவர் அப்படிச் சொன்ன மறு நாளே நீங்கள் ரமணியைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்து விட்டீர்களாம். இது பூரீகண்டனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதாம். இப்போது, பத்துப் பதினேந்து நாட் களுக்கு முன்பு, திரும்பவும் மைத்துனனுக்கு வேலை வேண்டுமென்று ரீகண்டன் கேட்டா ராம். இப் போது வேலை காலி இல்லை. காலி ஏற்பட்டால் கட்டா யம் வேலை தருகிறேன்' என்று முதலாளி சொன்ன ராம். காலி ஏற்பட என்ன வழி?’ என்று ரீகண்டன் யோசித்திருக்கிருர். ஒரு குருட்டு வழி தோன்றியிருக் கிறது. அதைத் துரைசாமியிடம் சொல்லி, உனக்கு ஐக்து ரூபாய் தருகிறேன். வேலையை ரகசியமாக முடித்துவிடு என்று ஆசை காட்டியிருக்கிருர். துரை சாமி அவர் சொன்னபடி அறைக்குள்ளிருந்த பட்டுத் துணியைச் சாப்பாட்டு நேரம் பார்த்து ஜன்னல் வழியாக எடுத்திருக்கிருர்; அதை டிக்கெட் அறைக்குள் ஒளித்து வைத்துவிட்டு, நீங்கள் தபாலாபீஸ் போன சமயம் பார்த்து, 'ரமணிதான் எடுத்து ஒளித்து வைத்திருக் கிருன் ! என்று கதை கட்டி விட்டிருக்கிருர். உடனே முதலாளி அவர் பேச்சை நம்பிவிடுவார் ; ரமணியைப் பிடித்து வெளியே அனுப்பிவிடுவார் என்று நினைத்தே அப்படிச் செய்தார்கள். அவர்கள் நினைத்தபடிதான் கடந்தது. ஆலுைம், முக்கியமானது எதுவோ அது I 501-6 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/80&oldid=808329" இலிருந்து மீள்விக்கப்பட்டது