பக்கம்:பர்மா ரமணி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வந்தது t 83 கிருனே !! கடவுளே ! அவன் உயிரோடு இருக்கவேண் டும் சுகமாக இருக்கவேண்டும்' என்று கூறிக் கொண்டே வலது பக்கத்துச் சுவரில் மாட்டப்பட்டி ருந்த கிருஷ்ணன் படத்தைப் பார்த்துக் கும்பிட்டார். அப்போது, சார், இதெல்லாம் உங்களுக்கு' என்று சொல்லி மேஜைமேல் மூன்று கடிதங்களை வைத்துச் சென்ருன் ஒரு வேலைக்காரன். மதுரகாயகம் ஒவ்வொரு கடிதமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு கடிதம் அவரது கண்பர் ஒருவர் குற்ருலத்திலிருந்து எழுதியது. மற்ருென்று திருச்சியிலிருந்து அவருடைய அக்கா எழுதியது. மூன்ருவது கடிதத்தை எடுத்ததும் மேலேயிருந்த விலாசத்தைப் பார்த்தார். உயர்திரு. டி. வி. மதுரகாய கம் அவர்கள் என்று மிகவும் மரியாதையாக எழுதப் பட்டிருந்தது. யாரது இவ்வளவு மரியாதையாக எழுதியிருப்பது ' என்று கேட்டுக்கொண்டே உறை யைக் கிழித்தார் ; உள்ளேயிருந்த கடிதத்தை எடுத் தார். படித்துப் பார்த்தார். படிக்கும்போதே அவ ருடைய முகத்தில் பிரகாசம் தோன்றியது. படித்து முடித்ததும், உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது. உடனே அவர் விருட்டென்று இடத்தைவிட்டு எழுந் தார். முதலாளி அறையை நோக்கி அந்தக் கடிதக் துடன் வேகமாகச் சென்ருர். - சார், சார் ! இந்தக் கடிதத்தைப் பாருங்கள் சார் ; படித்துப் பாருங்கள் சார் ' என்று குது.ாகலமாகக் கூறிக்கொண்டே முதலாளியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார். முதலாளியும் பரபரப்புடன் அக்கடிதத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கினர்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/86&oldid=808335" இலிருந்து மீள்விக்கப்பட்டது