பக்கம்:பர்மா ரமணி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வந்தது . 85 பிறகு, அவனை வைத்துக்கொள்ள மனம் இடம தராது. அதனுல்தான் முதலாளியவர்கள் என்னே வெளியேற்றியிருக்கிருர்கள்.அவர்கள் மீது தவறில்லை சக்தர்ப்பம் என்னைத் திருடனுக்கி விட்டது. ஆலுைம் உண்மையிலே நான் திருடன் அல்ல என்பதை எல்லா ரும் அறியவேண்டும். அறியக்கூடிய காலம் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசைதான் இப்போது எனக்கு இருக்கிறது. * - நான் வேலையில் இருக்கும்போதாவது எனக்குக் கிடைத்த சிறு தொகையாகிய பத்து ரூபாயைத் தங்க ளிடம் கொடுத்துவிட்டு, வயிருரச் சாப்பிட்டுக் கொண் டிருந்தேன். இனி அந்தப் பத்து ருபாய்க்கும் வழி யில்லை ! உங்களுக்குப் பாரமாகவே இருக்கவேண்டும். அதை நான் விரும்பவில்லை. அன்று இரவு கான் உங் களைப் பார்த்திருந்தால் நீங்கள் நிச்சயமாக என்னைப் போக விடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனுல்தான் தங்களிடம் சொல்லிக் கொள்ளா மலே வந்துவிட்டேன். கான் திருடன் அல்ல என்பது தெளிவாகும் வரை பட்டணத்தில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். கால் போனபடி கடந்தேன். சிறிது துரம் சென்றதும், இவ்வளவு நாட்களாக நமக்கு உணவு தந்த அம்மாளிடம் சொல்லாமல் வந்து விட்டோமே !’ என்று கினைத்து வீட்டுக்குச் சென்றேன் . ஆணுல், அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல ஆரம்பித்தால் கேரமாகும்; நீங்களும் வந்து விடுவீர்கள். அப்புறம், என்னைப் போகவிடமாட்டீர்கள் என்று நான் கினைத்தேன். நீங்கள் தீபாவளிக்கு வாங்கித் தந்த புதுச் சட்டையை அன்று நான் அணிந்திருந்தேன். அதை அறையில் கழற்றிப் போட்டுவிட்டு, கான் முதன் முதலில் உங்களிடம் வந்தபோது அணிந்திருந்த பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/88&oldid=808337" இலிருந்து மீள்விக்கப்பட்டது