பக்கம்:பர்மா ரமணி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வந்தது! 91 அந்தக் கோவிந்தன் சொன்னதையெல்லாம் அப்படியே உன்னிடத்திலே சொல்லியிருக்க மாட்டேனு?’ கோவிந்தனு! அவன் யார் ? என்ன சொன்னன் ?” காடகக் கொட்டகையிலே வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கிருரே, அவருடைய மகன்தான் கோவிந்தன் அவன் கேற்று ராத்திரி நீ சாப்பிடுகிற போது வந்து கதவைத் தட்டினன். கதவைத் திறந்து என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவன் ரம னியை விரட்ட ரீகண்டனும் துரைசாமியும் செய்த சூழ்ச்சியை என்னிடம் ரகசியமாகச் சொன்னன்.”

அவன் வந்ததாக என்னிடத்திலே நீங்கள் சொல்லவே இல்லையே!”
சொல்லி என்ன பிரயோசனம் தோன் பெரிய சந்தேகப் பிராணியாயிற்றே!” என்ருர் மதுரநாயகம். :அவன் என்ன சொன்னன்? விவரமாய்ச் சொல் லுங்களேன்.” -

மதுரகாயகம் கடந்தது முழுவதையும் ஒன்றுவிடா மல் கமலாதேவியிடம் விரிவாக எடுத்துச் சொன்னர். அதோடு, இப்போது ரமணியைப் பற்றி முதலாளி என்ன தெரியுமா சொல்லுகிருர் ? அவன் எங்கிருந் தாலும் உடனே வரவழைக்க வேணடுமாம். அவனுக்கு கிறையச் சம்பளம் கொடுத்து, உயர்ந்த உத்தியோ கமும் கொடுக்க வேண்டுமாம். அப்போதுதான் அவ ருடைய மனம் ஆறுதல் அடையுமாம்” என்ருர். முழுவதையும் கேட்ட கமலாதேவி, அடடே, அப்படியா விஷயம் ? நானும் அவசரப்பட்டுவிட்டேன். யோசித்துப் பார்க்கும்போது ரமணி மேல் எந்தவித மான குற்றமும் இல்லை என்றே தெரிகிறது. அன்று நீங்கள் எவ்வளவோ சொன்னீர்கள். கேட்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/94&oldid=808344" இலிருந்து மீள்விக்கப்பட்டது