பக்கம்:பர்மா ரமணி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பர்மா ரமணி போனேன்.-ஆமாம், இப்போது ரமணி எங்கே இருக் கிருன் ? அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா ?” என்ருள். கடவுள் அருளால் ரமணி உயிரோடுதான் இருக் கிருன். இதோ பார். அவன் தன் கைப்படக் கடிதம் எழுதியிருக்கிருன். இது திருச்சியிலிருந்து வந்திருக் கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், விலாசம் தான் தெரியவில்லை !” என்று கூறிக் கடிதத்தைக் கமலாதேவியிடம் கொடுத்தார் மதுரகாயகம். கமலாதேவி அதை வாங்கி அவசரம் அவசரமாகப் பிரித்துப் படித்தாள். படித்து முடித்ததும், அடே" தீபாவளிக்கு காம் தைத்துக் கொடுத்த சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, அவனுடைய பழைய சட்டை யைப் போட்டுக்கொள்ளத்தான், அவன் அன்றைக் குச் சாயங்காலம் வந்திருக்கிருன். இது தெரியாமல் நான் வீணுகச் சந்தேகப்பட்டு விட்டேன். நான் இவ்வளவு கெடுதல் செய்தும் ரமணி என்னை மறக்க வில்லை. என்னைப் பற்றியும் கடிதத்தில் எழுதியிருக் கிருன். அவனுக்குத்தான் எவ்வளவு பரந்த எண்ணம்?* என்று கண் கலங்கக் கூறினுள் கமலாதேவி. - சேரி கமலா, கடந்ததை நினைத்து வருந்துவதில் என்ன பயன் இப்போது அவனைத் தேடிக் கண்டு. பிடித்தால்தான் எனக்கு கிம்மதி ' திருச்சியில்தானே இருப்பதாகச் சொல்லுகி. நீர்கள் ! காமும் திருச்சிக்குப் போய் வெகு நாளாகிறது. உங்கள் அக்காளும்தான் அடிக்கடி வரச் சொல்லிக் கடிதம் போடுகிருர்களே 1 இன்றைக்கே புறப்பட்டுப் போவோம். ரமணியைக் கண்டுபிடித்து அழைத்து. வருவோம்...என்ன, யோசிக்கிறீர்கள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/95&oldid=808345" இலிருந்து மீள்விக்கப்பட்டது