பக்கம்:பர்மா ரமணி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துப்பறியும் சிங்கம் ! மதுரநாயகத்தின் அத்தான் வேதநாயகம் திருச்சி யிலே ஒரு பெரிய மருந்துக் கடை வைத்திருக்கிருர், காவேரிக் கரையிலே அவருக்குக் கொஞ்சம் கில புலன் களும் இருக்கின்றன. அவரும், அவர் மனைவி கல்யாணி அம்மாளும், மகன் ஆனந்தனும் வசதியாக வாழ்ந்து வருகிருர்கள். அன்று வேதநாயகம் வீட்டுக்கு வந்ததும், :: இதோ, உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. கனமாக இருக்கிறதே ' என்று கூறி அவர் மனைவி கொடுத்தாள். - - கடிதமா ? வீட்டு விலாசத்துக்கு யார் எழுதுகி ருர்கள்?’ என்று கேட்டுக்கொண்டே அவர் கடிதத்தைக் கையிலே வாங்கினர். அவருக்கு வரும் எல்லாக் கடிதங்களுமே மருந்துக் கடை விலாசத்துக்குத்தான் வரும் வீட்டு விலாசத்துக்கு மிகவும் அபூர்வமாகவே யாரும் எழுதுவார்கள். மருந்துக் கடையில் வேத காயகம் மும்முரமாக வியாபாரம் செய்துகொண்டிருப் பார். தினசரி கடிதங்களும் ஏராளமாக வரும் அதனுல் கடிதம் முழுவதையும் பொறுமையாகப் படிப்பாரோ, படிக்கமாட்டாரோ என்ற சந்தேகத்தில்தான் வீட்டு விலாசத்துக்கே மதுரகாயகம் எழுதினர். அத்துடன் வீட்டு விலாசத்துக்குக்கடிதம் எழுதினுல் அக்காளுக்கும் ஒருவாறு விஷயம் தெரியும் , அவளுடைய துண்டு தலும் இருக்குமல்லவா ? வேதநாயகம் உறைக்குள் இருந்த எட்டுப் பக்கங் களையும் மிகவும் பொறுமையுடன் படித்தார். படித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/97&oldid=808348" இலிருந்து மீள்விக்கப்பட்டது