பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 அது சில இடங்களில் ஆகாயத்திலே மேல்நோக்கி எழும்பும், சில இடங்களிலே கீழ்நோக்க வரும். இவ்வாறு காற்றில் மேலும் கீழுமான ஓட்டங்களும் உண்டு. உதாரணத்திற்குச் சில இடங்களைப்பற்றிக் கவனிப்போம். காற்று ஒரு திசையை நோக்கி அடிக்கிறபோது எதிரிலே ஒரு குன்று இருந்தால் அந்தக் குன்று காற்றைத் தடுக்கு

  ஷனுரட் கிாேடர்

மல்லவா? அப்போது காற்று மேல்நோக்கி எழும்பி அந்தக் குன்றைக் கடந்து போக முயலும். ஒர் இடத்திலே குளிர்ச்சியான சோலை இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கிற காற்று குளிர்ந்திருக்கும். பக்கத்திலே பொட்டலாகக் கிடக்கும் இடத்திலுள்ள காற்று சூரிய வெப்பத்தால் விரைவில் லேசாகி மேலே கிளம்பும், சோலைப் பக்கத்திலுள்ள குளிர்ந்த காற்று அங்கு வர முயலும். பகல் நேரத்திலே தரைப்பாகம் விரைவில் சூடேறி விடுவதால் அங்குள்ள காற்றும் சூடேறி லேசாகி மேலே கிளம்பும், அப்பொழுது சமுத்திரத்திலிருந்து குளிர்ந்த காற்றுத் தரையை நோக்கி வீசும். கடலுக்கு அருகி

                     18