பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8ஒரு நாள் திடீரென்று அந்த அம்மாச் சிட்டு இறந்து விட்டது. சின்னச் சிட்டுக்கள் நான்கும் கவலையோடு இருந்தன. அம்மா தங்களை வளர்க்கப் பாடுபட்டவற்றை யெல்லாம் நினைத்து நினைத்து அழுதன. சிறிது கூடக் கவலை தோன்றாமல் அம்மா தங்களை வைத்திருந்ததை எண்ணி எண்ணி ஏங்கின. இனிமேல் நமக்கு அய்மாவைப் போல் அன்பானவர்கள் யார் கிடைக்கப் போகிறார்கள் என்று நினைத்துத் துன்பப் பட்டன. கடைசியில் ஒருவாறு மனம் தேறி அந்த மண் வீட்டில் இருந்து வந்தன.

ஒரு நாள் இரவில் இடியும் மின்னலுமாகப் பெரு மழை பெய்தது, மழை பெய்ததால் வாய்க்காலில் வெள்ளம் பெருகியது. தண்ணீர், குருவிக் குஞ்சுகளின் வீடு வரை வந்து விட்டது. வீட்டுக் களிமண் சுவர் தண்ணீரில் கரைந்து வீடு இடிந்து விட்டது.

அந்தச் சிட்டுக் குஞ்சுகள் நான்கும் தத்தித்தடுமாறிப் பறந்து சென்று ஒரு மரத்தின் மேல் உட் கார்ந்து கொண்டன. அன்று இரவு முழுவதும் மழையில் நனைந்து அவற்றிக்குக் காய்ச்சல் வந்து விட்டது நான்கு குஞ்சுகளுக்கும் காய்ச்சல்! மருந்து கொடுக்க யாரும் கிடையாது. மருத்து இல்லாமலேயே மூன்றாவது நாள் காய்ச்சல் விட்டுவிட்டது.

"அம்மா கட்டிய வீடு மழையில் இடிந்து போய்விட்டது. இனி யார் வீடு கட்டித் தருவார்கள்?" என்று அவை வருந்தின.