பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


முத்துமணியைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே எல்லோரும் ஒன்றாய் இருப்போம்"என்றார்.

கண்ணப்பர் 'ஆகட்டும் அப்படியே இருக்கிறோம்' என்றார்.

அன்று முதல் எல்லோரும் ஒன்றாகவும் நன்றாகவும் இன்பமாகவும் இருந்தார்கள்.

முத்துமணி தனக்கு உதவி செய்த பச்சைக்கிளியையும் தன்னுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்கு நாள்தோறும் பாலும்பழமும் கொடுத்து அதனுடன் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

மாடுமேய்க்கும் கந்தன், அவளுடைய நகைகளை யெல்லாம் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து பொன்னப்பரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.