பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

ஐராவதி எனும் நதியின் வேகத்திற்கு எதிராக, அழைத்துச் சென்றது, மறுநாள் காலை, அந்நதியின் கரையோரமுள்ள ஒரு பட்டணத்தருகில். எங்கள் படகு நின்றது, அன்றைத்தினம் சாப்பாட்டிற்கு வேண்டிய சாமக்கிரியியைகளை வாங்கி வருவதற்காக நானும் எனது நண்பர்கள் சிலரும் பட்டணத்திற்குள் அனுப்பப்பட்டோம். அந்த வேலைக்காக நான் புறப்பட்ட போது என் தகப்பனார் "பையா! இந்த ஊரில் கடைத் தெருவில் மங்குஸ்தான் விற்றால், எனக்காக, ஆறு பழங்கள் வாங்கிக்கொண்டு வா" என்று சொன்னார். மங்குஸ்தான் என்றால் என்ன வென்று கேட்க, "அது மிகவும் ருசிகரமானதும் ரத்த புஷ்டியைத் தரும்படியானதுமான பழம்" என்று சொன்னார், அன்றியும் அப்பழம் இத்தேசத்தில் தான் கிடைக்கும் என்றார். நான் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போய், எங்கள் பிரிவிற்கு வேண்டிய உணவுப் பொருள்களை எல்லாம் வாங்கியானவுடன், என்னுடன் சென்ற, எனது சிநேகிதர் ஒருவர் உதவி யால், ஆறு மங்குஸ்தான் பழங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து எங்கள் படகில் ஏறி, கடை சாமான்களையெல்லாம் சமயற்காரனிடம் கொடுத்து விட்டு, என் தகப்பனாரிடம் பழங்களைக் கொடுக்கப் போனேன். அச்சமயம் அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு இரண்டு மூன்று கஜதூரம் போனதும். நான் இதோ அப்பா! நீங்கள் வேண் டிய-' என்று ஆரம்பித்ததுதான் ஞாபகமிருக்கிறது-உடனே மின்னலைப் போல் ஒரு வெளிச்சம் தோன்றி, இடி இடித்தது போன்ற சப்தம் காதில் விழுந்தாற் போல் ஞாபகமிருக்கிறது-அவ்வளவுதான். --- பிறகு என்னினைவிற்கு வருகிறது-ஏதோ ஒரு புதிய இடத் தில் நான் கண் விழிக்க, என் தாயாரின் கண்களை நான் சந்தித்ததே யாம்! என் மனதில் உண்டான ஆச்சரியம் கொஞ்சம் குறைந்தவுடன், "அம்மா!-தகப்பனார் எங்கே? அவர் எப்படியிருக்கிறார்?" என்று கேட்டேன். என் குரல் எனக்கே ஏதோ புதுமையாயிருந்தது. என் தாயார் அதற்கு, தழதழத்த குரலுடன், “அவர் சவுக்கியமாக-இருக் கிறார்-அவரைபற்றி உனக்கு கவலை வேண்டாம்-ஈஸ்வரன் கருணை பிழைத்தாய்-இப்பொழுது-மறுபடியும் தூங்கப்போ" என்று என்னைத்தடவிக் கொடுத்தார்கள். நான் உடனே தூங்கினேன் என்று நினைக்கிறேன். நான் கண்விழித்த போது, நான் இருந்த அறையில் வேறொரு வரும் இல்லை. ஒரு மின்சார விளக்கு மேலே எரிந்து கொண்டிருந்தது. சுற்றிப் பார்த்த பொழுது, நான் ஒரு ஆஸ்பத்திரி அறையில் இருப்பதை அறிந்தேன், மெல்ல மெல்ல என்க்கு எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது நான் காண்பது கனவல்ல என்று கண்டேன்-நான் கொஞ்ச முன் பாகப் பார்த்தது என் தாயார் என்பதற்குச் சந்தேகமில்லை-எங்கே அவர்கள் இப்பொழுது அவர்கள் தன் வழக்கப்படி என் நெற்றியில் 4