உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் ஆட்டம்பாட் டார்ப்பாட்டம் யாவும் அடங்கின அங்கிருந்த பெண்கள் எல்லாம் ஓடி மறைந்தனர் நாட்டந்தனை மண்டபத்தின் மீதுற விட்டான் நயனஒளி குன்றியது யூசரு குக்கே ஓட்டினாள்தன் பார்வைதன்னை யூசரு கின்மேல் ஒளிகுறைந்த தந்தப்பெண்ணின் கண்ணி ரண்டிலும் ஏட்டிலாரும் எழுதவொண்ணா அழகன் அழகி இருவருமே மூர்ச்சையுற்று வீழ்ந்தார் தரையில் ஜின்கள் அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் 17 (76) காற்றினும் விரைந்து செல்லும் கணத்திலே உலகைச் சுற்றும் மாற்றுரு பலவெ டுக்கும் மனிதரைப் போன்றுந் தோன்றும் ஆற்றலுக் கிணையே யில்லை அழகினும் அவ்வா றாகும் சாற்றுவார் இதனை மக்கள் சார்நதநா ஜின்க ளென்றே! (77) நெருப்பினால் படைத்து முன்னம் நீள்புவி தன்னில் சென்று நெறிபட வாழு மென்று நிர்மல னாமி றைவன் தெரிவித்து ஜின்கள் தம்மை திகழுற அனுப்பி வைத்தான் பரிவுடன் இறையு ரைத்த படியவை வாழ்ந்த சின்னாள்!(78) பின்பவை உலகில் செய்த பீடறு நடத்தை கண்டு மன்பெறும் இறைய வற்றை வதையுற அழித்துப் போட்டான் பின்பவை இறைஞ்சி வேண்ட பிசாசுபோல் உலகம் தன்னில் மன்னிடும் அருவ மாக வாழ்ந்திட வைத்து விட்டான்! (79) நிறைபட வாழ்ந்த வாழ்க்கை நெடியவன் உரை மறுப்பால் குறைபட மாய்ந்து கெட்டுக் கொடியபேய் பிசாசுபோன்று மறைந்துமே உலகம் தன்னில் மனிதர்க்கு அடங்கி நாளும் உறைந்திடும் கீழ்மை ஜின்கள் உற்றதாம் மேலும் கேளும் !(80) பூமியும் வெறுத் தொதுக்க புனல்செடி கொடிம ரங்கள் ஏமமில் பூண்டு புற்கள் யாவையும் வெறுத் தொதுக்க தாமமர்ந் திருக்க வுண்ண ஜகத்திலே ஏது மின்றி வாமமாம் அந்த ரத்தில் வதியவும் உண்பதற்கு M ந.-3 (81)