{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
! 18 பல்கீஸ் நாச்சியார் காவியம் மானுடர் தின்றெ றிந்த மாசுடை எலும்பைச் சோற்றை தானுணும் நிலையை ஜின்கள் தனக்கிரை யாக்கி வைத்தான் மாணுநல் லொழுக்கம் நீதி மறைவழி நடத்தை விட்டோர் தானிதை நோக்கி யாய்ந்து தனியவன் வழி நடத்தல் (82) நன்றென உரைப்பேன் இன்றேல் நரகிடை வீழ நேரும் பொன்றிய ஜின்னி னத்தில் பிறந்தவன் இபுலீ சென்பான் அன்னவன் இறைம றுப்பால் அடைந்துள கீழ்மை காண்க இன்னுமோ உரைத்தல் வேண்டும் இறையுரை மீறல் தீதாம் (83) ஜின்களில் ஆண்கள் பெண்கள் சேர்ந்துமே மனிதர் போல் அன்புடன் வாழ்வ துண்டாம் அகமகிழ் வோடு பிள்ளை நன்றுற பெறுவ தற்கு நரர்தமை அழைத்துச் சென்று பொன்றிடா வகையில் பிள்ளை பேறுபார்த் திடச்செய் யும்மாம் (84) இறைமறுப் புடைய ஜின்கள் இடையிலே வாழ்ந்த தாலே குறைந்த எண்ணிக் கையுள்ள கோதறு நல்ல ஜின்கள் மறைந்துமே அழிந்து போகும் வகைபட நேர்ந்த தாமே மறையவன் இவற்றை மேலாய் வாழ்ந்திடப் பணித்தான் நன்கு (85) மானிடர் வாழாத் தீவில் மலைபெறும் காட்டோ ரத்தில் தானிவை நாட மைத்து தவிலே அரசை வைத்து ஊனுடல் நகரம் வீடு ஒன்றுமே மனிதர் கண்ணில் தோன்றிடா தகைமை செய்து சுகப்பட வாழு மாமே (86) (87) ந்தநல் வகையைச் சேர்ந்த ஈடில்லா ஜின்கள் கூட்டம் கந்தமார் சபாநன் நாட்டிற் கடுத்துள காட்டிற் கப்பால் சுந்தர நாட மைத்தே சோர்விலாப் பொலிவி னோடு சந்ததம் இன்ப மாகத் தரமுடன் வாழ்ந்த தென்பர்! ஆட்சியில் நல்ல வேந்தன் அமைச்சரும் அவ்வா றாமே வாட்டிடும் வறுமை இல்லை வாழ்க்கையில் தீமை இல்லை ஈட்டிடும் செல்வச் சேர்ப்பும் இழிசெயல் ஏதும் இல்லை பூட்டிலை காப்பு மில்லை பொறாமையுள் ளோரு மில்லை!(88) கல்வியில் செருக்கு மில்லை கருமத்தில் பாவ மில்லை நல்வித உழைப்பி னாலே நாட்டினை மேன்மை யாக்கி வல்லெழில் காட்டி வாய்மை வாழ்வினில் காட்டி, அன்பு செல்லிடம் எங்கும் காட்டி சிறுமையை ஓட்டி நெஞ்சில் (89)