{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் 19 இறைநெறி கூட்டி, நாட்டில் இடும்பையை ஒட்டி, ஆட்சி நிறைவுறக் காட்டி, மக்கள் நெஞ்செல்லாம் இன்ப மூட்டி முறையுடன் அரசன் ஆள மேன்மையில் நாட்டோர் வாழ உறைந்தனன் ஆங்கே வேந்தன் உயர்வெலாம் சிறப்புற் (நோங்க! (90) மனிதரை நாணச் செய்யும் மாண்புடன் ஜின்கள் கூடி தனியர சொன்ற மைத்து, தாழ்விலா வாழ்வு பெற்று இனிதுற வாழ்ந்த தங்கே இராஜநன் மனைவி கொண்டான் நனிதரும் துணைவி யோடு நாளுமே இன்பம் கண்டான்!(91) கனியென ஜின்னின் வேந்தன் கணவியோர் பெண்ணைப் பெற்றாள் வனிதையர் வாழ்த்து ரைக்க மகிழ்ச்சியெங் குப்நி றைக்க புனிதமார்க் குழந்தை யென்றே போந்துளோர் ப த்து ரைக்க இனிமைசேர் உமையிரத் தென்றே யிட்டனர் பெயர தற்கே (92) உமையிரத் தென்னு மந்த உயரெழிற் குழந்தை நன்றாய் அமைவுறத் தவழ்ந்து மூர்ந்தும் அடிதொடர் நடைப யின்றும் இமையவர் தேயப் பெண்ணும் இவட்கிணையிலையென் றோதச் சமைந்தனள் பருவ முற்றே சந்திரன் நாணக் கண்டே (93) கரும்பிலே இனிப்புப் போல கனிகளில் சுவையைப் போல அரும்பிலே மலர்ச்சி போல அதனிடை மணத்தைப் போல வரும்புது வசந்த கால மலர்ச்சியின் பொலிவைப் போல பெரும்புகழ் உமையிரத் தென்பாள் பெண்பெறும் பருவம் பெற்றாள் (94) காலையில் கிழக்கு வானில் கமழ்ந்தெழும் பருதி போன்றும் மாலையில் கடலைத் தொட்டு வதிந்தெழும் நிலவைப் போன்றும் சோலையில் மலர்க்கு லத்தில் தோன்றிடும் அழகைப் போன்றும் கோலமா அழகு வந்து கூடிய துமையிரத் தின்பால் (95) மரகதச் சுடரோ என்பார் வைரமா ஒளிர்வோ என்பார் தரமுயர் மாணிக் கத்தின் தனிஒளி இதுவோ என்பார் பருமுத் தினிடையி ருந்து பளிச்சிடும் பொலிவோ என்பார் நெருப்புடல் உமையி ரத்தை நேரிலே காணும் பெண்கள்(96)