உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

20 பல்கீஸ் நாச்சியார் காவியம் மதுவென மயக்கும் மேனி மாமழை போன்ற கூந்தல் புதுமலர் வதனம் நெற்றிப் பொன்னிற நிலவுக் கீற்று அதரமோ பவளத் துண்டம் அளிசெயும் பற்கள் முத்தாம் இதுவொரு குமிழம் என்றே யியம்பிடும் வகையில் மூக்கு (97) பளிங்கினால் செய்த குண்டில் பளிச்சிடும் மின்னல் சேர்த்தே விளங்கிடும் நெடிய கண்கள் மீதமும் இவ்வா றாக துளங்கிடும் அழகு மிக்க சுந்தரி உமையிரத் தென் ே ற களங்கமில் வானப் பெண்ணும் கழறுமே காண நேரின் (98) இதற்குமுன் னிவளைப் போல எவளுமே இவ்வை யத்தில் உதித்தது மில்லை மேலோன் உவந்துமே படைத்த தில்லை நிதியென ஜின்னி னத்தார் நெஞ்செலாம் மகிழ வந்தாள் வதுவையாம் இவளுக் கேற்ற வாலிபன் எங்கே யுள்ளான் (99) எனும் உரை ஜின்கள் வாழும் இடமெல்லாம் ஒலிக்கக் கேட்ட நனிமிகு வாலி பச்சின் வர்க்கமே மோக முற்று புனையதல் லாடை பூண்டு பொலிவுற அணிகள் சூடி நனிதரு வாடை பூசி நடையிலே மிடுக்குக் காட்டி (100) அரண்மனை நாடிச் சென்றே அரசமா ஜின்னைக் கண்டு திருமிகு நுமது பெண்ணைத் திருமணம் செய்ய வந்தோம் தருகநீ ரெமக்கே என்று தனித்தனி யாகக் கேட்டார் வருமவர் தன்னைப் பார்த்து மகிழ்ந்தவச் சின்கள் வேந்தன் (101) நாமெல்லாம் ஜின்கு வத்தார் நமக்குளே ஏற்றத் தாழ்வு தீமைசேர் சாதி பேதம் சிறிதுமே என்று மில்லை தாமுயர் வென்ற எண்ணம் தனத்தினால் படிப்பால் இல்லை தாமதம் இன்றிப் பெண்ணை தருவதில் அட்டி யில்லை (102) சூடலாம் அவளை மாலை சொல்லிதில் மாற்றம் இல்லை பீடுடன் எழுவீர் இந்தப் போதிலே அவளைக் கண்ணால் நாடியே காண்பீர் அந்த நங்கைநும் மவரில் யாரை ர் கோடிடா வலையில் ஏற்றுக் கொள்கிறாள் என்று கேட்போம் (103)