உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் 21 தந்தைதாய் சுற்றம் நட்பு சார்ந்துதேர்ந் தெடுத்திட்டாலும் அந்தநற் பெண்வி ருப்பம் அறிவதே யுசித மாகும் இந்த நல் வழியை நாமும் ஏற்றுளோம் தொன்மை யாக அந்தநல் மரபிற் கேற்ப அணுகியென் மகளைக் கேட்போம் (104) என்றனன் ஜின்கள் வேந்தன் எழுந்தனர் வாலி பத்தார் குன்றெனும் தோள்கள் விம்ம குதுகலம் மனதிற் பொங்க மன்றலில் தனக்கே அந்த மங்கைதா ரணிவர ளென்றே பொன்றிடா நினைப்பி னோடு போந்தனர் காளை யோரே சந்தம் வேறு வண்டார்த் தொலிக்கும் பொழிலொன்றில் மதியம் சூழ்ந்த இரவினிலே கண்டோர் வியக்கும் கனகத்தூண் கணக்கின் றிலங்க நெடுந்தூரம் அண்டா அகலம் உடையதுவாய் அணிசேர் வெள்ளித் தரையதுவாய் (105) தண்டார் எங்கும் கோத்திலங்கத் தரைமேல் பட்டுத் துணியிலங்க (106) நன்றாய் அமைந்த கூறையில்லா நனிசேர் நெடுங்கால் மண்டபத்தில் குன்றா எழில்சேர் உமையிரத்துக் கோடி சூரியப் பேரொளியாய் அன்றே அலர்ந்த தாமரைப்பூ அனைய தோழி பலர்சூழ சென்றே அமர்ந்தாள் வானினிடை திகழும் மதியும் உடுக்களும்போல் (107) மண்ட பத்தை சூழ எங்கும் வாசம் கமழும் மலர்க்காடாம் அண்டி அவற்றில் தேன் அருந்த ஆர்ககும் வண்டின் நாதஇசை அண்டை யிருந்த நீரூற்றால் அருவி எழுப்பும் தாளலயம் மண்டி வளர்ந்த மரத்திலெல்லாம் வதியும் புட்கள்! வாழ்த்தொலிப்ப (108/ 1.புட்கள் - பறவைகள்,