உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

28 பல்கீஸ் நாச்சியார் காவியம் இந்த இனிய சூழலிலே எழிலார் உமையிரத் தினைவிரும்பும் சிந்தை யோடு வாலிபர்கள் சேர அரசன் மகிழ்வினொடு வந்தான் வரும்நல் வாலிபரை மகள்தான் கண்டு தன்விருப்பம் எந்த யுவன்மேல் எனக்காட்ட ஏற்ற வகையில் அவள்முன்னே கந்தம் கமழும் தோப்பினிலே கனிகள் உதிர்க்கும் தருக்களிடை செந்தா ழம்பூ பூத்திருக்கும் செழிய ஓடை அருகினிலே வந்தே வசந்தம் உடல்தீண்ட மகிழ்ந்தே உமையிரத் தாளிருக்க அந்த அவளைத் தோழியர்கள் அரும்பு கோக்கப் பணித்தனரே இந்த வேளை இவள் தந்தை எழிலார் வாலி பர்சூழ வந்தான் வந்தோர் உமையிரத்தை வாசம் ஈர்க்கும் மூக்கதுபோல் (10)) (110) சுந்த ரத்தன் கண்களினால் சுண்டி யீர்த்துப் பார்த்தனரே முந்த அவளும் அவர்களையே மெதுவாய் நிமிர்ந்து நோக்கினளே (111) வானில் மின்னல் பூத்ததுபோல் வைரக் குவியல் சிலிர்த்ததுபோல் கானில் நாக மணியொன்று கழன்று கிடந்து பொலிவதுபோல் வானச் சுடரெல் லாமொன்றாய் வடிவம் எடுத்து வந்ததுபோல் கானக் குரலாள் உமையிரத்தைக் கண்டார் வந்த வாலிபர்கள். (112)