{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
24 பல்கீஸ் நாச்சியார் காவியம் ஆனால் இந்த நிலையிவளும் அடைந்த விதம்தான் யாதென்றே தானே அறியத் தனியாக தகுந்தோர் உரையைக் கேட்டனனே மானா மிவளைப் பிசாசொன்று மகிழ்ந்து பற்றி இருப்பதுவாய் கோனை நிகர்த்த மந்திரத்தான் குறிபார்த் தெடுத்துக் கூறினனே மருத்து வத்தான் நோயென்றான் மற்றோர் விதிமேல் பழிபோட்டார் இருத்தல் தீதாம் இவள் ஊரில் என்றும் சிலபேர் இசைத்தனரே அருத்த மற்ற அவ்வசனம் அரசன் மனத்தைக் கலக்கியதே வருத்த முற்றே அமைச்சரின்பால் வகுத்தே விளக்கம் கேட்டனனே ஊருக் கப்பால் தனியிடத்தில் உப்ப ரிக்கை மாளிகைகள் சின்னஞ் சிறிய நீர்நிலைகள் (117) (118) சேர அமைத்துப் பூங்காவும்
- கார்கண் டாடும் மயில்மான்கள்
காவல் பெண்கள் உடன் வைப்போம் பாரம் குறையும் பின்னாலே பார்ப்போம் என்றார் கள்ளமைச்சர் (119) அந்தப் படிக்கே நொடிப்பொழுதில் ஆக்கி அதன்பால் உமையிரத்தை சொந்தத் தோழி மார்களுடன் சுற்றிக் காவல் பெண்களுமாய் நிந்தை அகல வைத்திட்டான் நித்தம் சென்று பார்த்திட்டான் விந்தை மகளைக் காணுங்கால் விம்மும் துயரில் வாழ்ந்திட்டான் (120) கார்-மேகம்