உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார்காவியம் கன்னல் தேனாம் உமையிரத்தை கருதும் இளைஞர் எவருமிலர் அன்னை நோயில் படுத்திட்டாள் அரிய மகளின் நிலைகண்டு துன்னும் அவளின் துயர்போக்கச் சொன்னான் அரசன் ஆறுதல்கள் இன்ன நிலையில் காலப்புள் இறக்கை கட்டிப் பறந்ததுவே பூங்கா தன்னில் மாளிகையில் புகழுக் குரிய உமையிரத்தாள் தாங்கும் தோழி புடைசூழ தனியே காலம் கழித்தனளே 25 (121) ஓங்கும் எழில்சூழ் பூங்காவின் ஓரம் கூட ஆண்மக்கள் தாங்கா வெயில்மழை தனில்கூட சாரிந்து செல்ல அஞ்சினரே (122) மானும் மயிலும் மகிழ்ந்தாட கான கத்தில் போயமர்ந்து மஞ்சம் மீது கிளிபாட தானும் தனது தோழியரும் தங்கிப் பூங்கா மாளிகையில் தேனும் பாலும் கலந்துண்டு திளைக்கப் புனலில் தினமாடி கதைகள் பேசி வருவாரே (123) இந்தப் பழக்கம் மிகுத்துவர இனிதாய் ஒருநாள் கானகத்தில் முந்தி ஓடும் ஒருத்திதனை முடுகிப் பிடிக்க மற்றவர்கள் பிந்தி ஓட வெகுதூரம் பிணைந்தே காட்டில் சென்றுவிட்டார் அந்த வேளை தன்னிலந்த அரிய கான கத்தினிடை (124)