{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
26 பல்கீஸ் நாச்சியார் காவியம் வந்தே யிருந்த யூசருகை வகையில் கண்டு விட்டனரே இந்த அழகன் போலழகன் இகத்தில் இல்லை எனச்சொல்லி விந்தை அழகி உமையிரத்தின் விழிக்கன் னானைக் காட்டினரே சிந்தை தன்னில் அவள் அவனை சிறக்க நினைத்து நின்றனளே நாணம் முகத்தில் சிவப்பேற்ற நளின உடலம் வியர்த்தொழுக காணும் அந்தக் காளைதனை கண்டு நெஞ்சம் துடிதுடிக்கப் (185) பேணும் பெண்மை பண்புவந்து பிடரி பிடித்துந் தித்தள்ள நாணிற் கழன்ற அம்பொக்க நயந்தாள் உமையிரத் தாள்பூங்கா (126) பின்னே வந்தார் தோழியர்கள் பெருமூச் சுடனே கட்டிலிலே தன்னை யிழந்த நிலையினிலே படுக்கை விட்டே எழுந்தமர்ந்து அடுத்தவன் வந்தெனைக் கண்டானேல் தவித்தே கிடந்தார் உமையிரத்தாள் அன்னாள் நிலையைக் கண்டறிந்த அன்புக் குரிய தோழியர்கள் சொன்னார் அவனை நொடியிலிங்கே தூக்கி வருவோம் நாங்களென்றே பகர்ந்தாள் மெதுவாய் உமையிரத்தாள் அவனின் ஆவி பிரிந்திடுமே (127) தொடுக்கு முமது செயலாலே துயரம் மேலும் பெருகிடுமே விடுப்பீர் உமது நினைப்புதனை விதிக்கு முண்டோ நன்மருந்து (188)