{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் தாயா ரேச ஊரேச தகாத செயலைச் செய்வதினும் பாயோ டிருந்து நினைந்துருகிப் பட்டு மாய்தல் மேலன்றோ தோயும் அடக்கம் பெண்ணுடைமை சொந்தத் தந்தை கட்டளையை மாய விடுத்துக் கான்சென்றோம். வந்த வினைக்கு நாணிடுவோம் இந்த அளவோ டிதைவிடுப்போம் என்னை விட்டே நீர்செல்வீர் பந்த முள்ள தோழியரே பாவச் செயலை எடுத்தியம்பி 27 (129) நந்தம் இறைவன் மன்னிப்பை நாடித் துதித்துப் பெற்றிடுவோம் சிந்தை இதையே விரும்புதடி செல்வீர்! என்றாள் உமையிரத்தாள் (130) போனார் தோழிப் பெண்களெல்லாம் புதையல் கிடைத்தும் நம்மரசி ஏனோ மறுக்கின் றாளென்றார் எடுத்து வருவோம் அவனைஎன்றார் தானாய் அவனை இவள்பார்க்கும் தகைமை செய்து வைத்திடுவோம் தேனாம் நமது முடிவென்றே செப்பிச் சென்றே யூசருகை (131) மீண்டும் கண்டார் அவன்முன்னே விளங்கும் மான்க ளாய்நின்றார் தாண்டிக் குதித்தார் அவன்கவனம் தன்னை யிழுக்கச் சிரித்திட்டார் பூண்டான் அவனும் வில்கையில் பெண்க ளாகி நிலைசொன்னார். தூண்டில் கண்ட மீனதுபோல்
- துரகத் சேறி யோடினே
துரகம் குதிரை (132)