உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

28 பல்கீஸ் நாச்சியார் காவியம் இழுத்து வந்தார் துரகமதை யாரும் காணா நிலையினிலே கொழுத்த அந்தக் குதிரைதனை கொண்டே வந்தார் பூங்காவுள் விழித்தான் புதிய இடம்கண்டு வீரன் அழகன் யூசருவே அழுத்தமாக அவன் ஆங்கே அயர்ந்து தூங்க மந்திரித்தார் படுத்தான் எழுந்தான் உணவுண்டான் பாடல் ஆடல் ரசித்திட்டான் அடுத்த கணத்தில் உமையிரத்தை அருகே யிருந்த மாளிகைமேல் தொடுத்த விழியால் கண்டிட்டான் தோகை யவளும் பார்த்திட்டாள் அடித்த புயலில் வீழ்வதுபோல் (133) அவளும் அவனும் வீழ்ந்திட்டார் ! (134) எண்சீர்க்கழிலடிசந்தவிருத்தம் யூசருகைக் கண்டுமையி ரத்தென் னும்மயில் உயிர்ப்படங்கி மூர்ச்சையுற்று வீழ்ந்ததைப் பார்த்து மோசமிக வந்ததென யெண்ணி பயந்தே முன்பொழிந்த தோழியர்கள் ஓடியே சென்று பாசமுடன் உமையிரத்தைத் தூக்கி யெடுத்து பதைபதைக்க மூக்கில்கை வைத்துமே பார்த்தார் நாசியிடை சுவாசமிகச் சிறிய அளவில் நலிந்துவெளி வருவதறிந் தச்சம் தவிர்த்தார் ஓடியொரு பெண்சிறிய கலச மொன்றிலே (185) 1 உதகம்நிறைத் தெடுத்துவந்து முகத்தில் தெளித்தாள் கூடிநின்ற தோழியரை விலக்கிப் புகுந்து குளிர்விசிறி கொண்டொருத்தி வீசிட லானாள் சேடியரின் உபசரிப்பால் உமையிரத் தென்பாள் சிலிர்க்கவுடல் கண்திறந்து சுற்றி நோக்கியே ஏடியந்த வாலிபர்தான் என்ன ஆயினார் எனத்தனது 2கிஞ்சுகவாய் திறந்துமே கேட்டாள் 1.உதகம் - தண்ணீர் 2. கிஞ்சுகம் -கிளி (136)