உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் பாய்ந்த அந்த சொல்லின் பொருள் புரிந்த தோழியர் பாவையவள் காதலறிந் துள்ளம் மகிழ்ந்தார் தோய்ந்தபெருங் காதலைப்போல் பாச உணர்வைத் தூண்டுகின்ற சக்திவே றில்லை யென்பதை ஆய்ந்தறிய இவளின்நிலை ஒன்றே போதுமென் றுவகையுடன் தங்களுக்குள் கூறி மகிழ்ந்தார் வாய்ந்தபே ரழகியுமையி ரத்தா ளைக்கண்ட வாலிபர்கள் பிழைத்ததில்லை என்ற நினைப்பு மேவியதும் தோழியர்கள் அவ்விடம் விட்டே விரைந்தோடி ஓர்நொடிக்குள் யூச ருகுள காவடைந்து கவலையோடு பார்க்க லாயினார் கண்விழித்தான் அந்தப்போதில் யூச ருகுதான் பாவையர்கள் அவன்வுயிர்த்த நிலையினைக் கண்டு பதமதிவான் தொடுமளவும் எகிறிக் குதித்தார் சாவிவனைத் தொடவுமஞ்சி ஓடிய தாலே சாலுநம திளவரசி திருமண மென்றார் தேனையுண்ட நாவுதட்டைத் தடவுதல் போல (137) (138) தினைவிதைத்தான் முளைவரவை நோக்குதல் போல ஞானவான்கள் இறையுதிப்பைக் காண விழைந்தே நனிசிறக்கத் தன்னைத்தான் பார்ப்பது போல, கானகத்தில் வேடன்மான் தேடுவான் போல கவிஞன்புது உவமைதேடி அலைவது போல ஆணழகன் யூசருகு உமையிரத் தாளை அகத்திருத்தி மண்டபத்தை நோக்கிட லனன் (139) பொன்னொளிர்வு பூண் யெழில் மண்டபம் மீது புதுநிலவு பூத்ததுபோல் நின்றது பெண்ணா? மன்னும்வெறுந் தோற்றமதா என்ற நினைப்பு மனத்திலெழ யூசருகு திகைப்பினி லாழ்ந்தான் தன்னுடைய மனத்துறுதி தன்னை மாற்றி தனது முன்னே தோன்றியதோ அந்த வடிவம் என்ற நினைப் பெழுந்திடவே யூச ருகுவின் இருவிழியும் மண்டபத்தை மீண்டும் நோக்கின (140)