உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

30 பல்கீஸ் நாச்சியார் காவியம் புதியஇடம் புதியநிலை புதிரை எழுப்ப புகுந்துவிட்ட ஆசைமனத் துணிவை எழுப்ப வதியுமிளம் பருவமது உணர்வை எழுப்ப வசந்தகால தென்றல்மனக் கிளர்ச்சி கொடுப்ப விதியுமந்த இருவர்க்கும் ஒத்தே யிருப்ப மேலவனின் ஆணைப்படி யாவும் நடப்ப அதிசயிக்கும் விதத்திலன்று யூச ருகெனும் ஆணழகன் தனதுபோக்கில் புதியவ னானான் ! அந்தநிலை தன்னிலவன் தோழிப் பெண்களை அருகழைத்து இனிமையாகப் பேசிட லானான்! சுந்தரிகாள் சற்றுமுன்னே மண்டபம் மீது (141) தோன்றியபெண் உண்மையிலே யாரெனக் கேட்டான்; அந்த அவள் இப்பொழுது என்ன ஆயினாள்? அவளை நானும் மீண்டும்காண முடியுமா என்றான் வந்துவிட்டான் யூசருகு வழிக்கென் றறிந்த மங்கையராம் தோழியர்கள் ஓட்டம் பிடித்தார் தோழியரைக் காணாததால் உமையிரத் தாள்தான் சுடர்முகத்து யூசருகின் மீதிலே கொண்ட ஆழியனற் காதல் தரும் துணிவதி னாலே அகத்திலெழும் புதியதொரு பரவசத்தாலே ஊழியூழி யாகஉள்ள மரபினை விட்டே உந்தியெழுந் தோடி நின்றாள் மண்டப மீதே ஆழிமீது புதுநிலவு புறப்படக் கண்ட அல்லியானான் யூசருகு மந்தப் போதிலே நான்குகண்கள் பேசியதாம் நாடு மகிழ நாணந்திரை இட்டதுவாம் மரபு மகிழ தேன்மலர்கள் உகுத்தனவாம் தருக்கள் நிறைய சிங்காரப்பண் பாடினவாம் புட்கள் இனிய மான்மதத்தை பரப்பியதாம் வாசம் புதிய மஞ்ஞை நட மாடியதாம் இறக்கை விரிய கூனரும்பு முல்லைபடர் கொம்பினைப் பற்றி (142) (143) குளிர்ந்ததென்றல் ஊதியதாம் காதல் வெற்றியை (144) 1மஞ்ஞை மயில்