உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் ஓடிவந்த தோழிப்பெண்கள் மண்டபம் மீதில் ஒளிவிளக்காய் உமையிரத்தாள் நிற்பதைக் கண்டார் ஆடகப்பொன் மேனிகொண்ட யூச ருகுதான் அவளைத்தன திருவிழியால் பார்த்த நிலையில் ஈடிலாத பூங்காவிடை மேடையின் மீதே இருவிழியும் இமைத்திடாது நிற்பதைக் கண்டார் ஊடேயிரு பேர்களையும் காத லெனும்மின் இறுகப்பிடித் திருப்பதறிந் துள்ளம் மகிழ்ந்தார் புறநிலையை மறந்து நிற்கும் உமை ரத்தாளின் CARE (145) பின்புறமாய் சென்றொருத்தி கண்ணைப் பொத்தினாள் எரியுதடி கண்கள்கையை எட்டி" யென்றே . இதமுறவே உமையிரத்து கூறிட லானாள் "தெரிவதைக்கை மறைத்ததினால் மனமெ ரியுதா சிமிட்டிடாது பார்த்ததினால் கண்ணெ ரியுதா புரிந்து கொண்டோம் உன்நிலையை என்பதி னாலே பொய்யுரைத்தால் நாங்களொன்றும்ஏ மாறிட மாட்டோம் என்று சொல்லி கையெடுத்தாள் பொத்திய தோழி இணைந்து நின்ற தோழியர்கள் நகைஒலி செய்தார் கொன்றுவிடு வாளைப்போன்று தோழியர் தம்மை (146) கோதையவள் நோக்கியுமே மெல்ல நடந்தாள் சென்றறையில் படுக்கையின்மேல் சாய்ந்திட லானாள் சேடியர்கள், 'அவனைப்பிடித் திருக்குதா" என்றார் "ஒன்றுமக்குச் சொல்லுகின்றேன், அவரை இன்றினான் உயிர்த்திருக்க முடியாதது மெய்" யென் நுரைத்தாள் சென்றிதனை வேந்தருக்கு நாங்கள் சொல்லுவோம் (147) திருமணநாள் குறிப்பதற்குத் தூண்டுதல் செய்வோம் வென்றுவரு வோமெனவே தோழி யர்சிலர் வீறுரைத்து மிகவிரைவாய் அறையைத் தாண்டினர் 'மன்றல்காண மகிழ்ந்துசெல்லும் தோழிப் பெண்களே வாலிபரின் மனமறிய வேண்டாவோ" என்றாள் ஒன்றுசேர்ந்த உங்கள்பார்வை ஒன்று போதாவோ உளமறிய அவரை என்ன கேட்க வேண்டுமாம்" (148) 19