{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
.. பல்கீஸ் நாச்சியார் காவியம் இந்தஉரை பின்னையொரு தோழி யுரைத்தாள் இன்னொருத்தி இளவரசி கூற்றுநன் றென்றாள் அந்த ஆளு பெண்ணைக்கண்டால் ஓட்டம் பிடிப்பார் ஆதலாலே கேட்டறிதல் அவசிய" மென்றே பிந்திநின்ற தோழி சொன்னாள் அவளின் கூற்றினை பின்மொழிந்தார் வேறுசில சேடிப் பெண்களும் .. "முந்த அவர் தன்னையி ராமுற்றிலும் காப்போம் விடிந்தபின்னர் மற்றவற்றை கவனிப்போம் என்றே"(149) மூலையிலே நின்றிருந்த தலைநரை கண்ட மூதாட்டி போன்றஒரு சேடியு ரைத்தாள் "காலைவரை பொறுத்திருக்கக் கூடுமா இந்தக் .. கன்னி' ' யென்று வேறொருத்தி சொல்லிச் சிரித்தாள் 'வேலையற்ற தொணதொணப்புக் காரச் சேடிகாள் வீணுரைகள் போதுமடி செல்லுங் களெ'ன்றாள் சோலையிலே தங்கியுள்ள வாலிபர் நன்றாய் தூங்குவதற்கு உதவிசெய்ய இளவ ரசிதான் "செல்லும்படி சொல்லுகின்றார் வாங்கடி செல்வோம் சிந்தனையில் இளவரசி அவரைக் கண்டுமே நல்லுரைகள் பேசிட்ட்டும் நயந்தும கிழட்டும் நாமெலாமிங் கிருப்பதினி தீதடி!" என்றே வெல்லம்போல இளவரசிக் கினிக்கும் உரையை வேறொருத்தி விளக்கமுடன் இனிதாய் உரைத்தாள் எல்லையிலா உலகினுக்கு வெளிச்ச மளிக்கும் இன்பநிலா பார்த்திருந்த திந்நி கழ்ச்சியை அறுசீர்க்கழி நெடிலாசிரிய சந்தவிருத்தம் நிலவு சிரித்தது வனிருந்து நெடிய உடுக்கள் சிரித்தனவே மலர்கள் செடிகொடி மரத்திருந்து மலர்ந்தே சிரித்தன தேனுகுத்து நலமே விளைக்கும் கீதம்தனை நாடிப் பரப்பின புட்களெல்லாம் (150) (151) உலகை மறந்தான் காதலினால் உயர்ந்த குணத்தான் யூசருகு (282)