உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் 33 கண்ட அப் பெண்ணை மனத்திருத்தி கணமும் அவளை மறவாமால் மண்டும் ஆசைக் குடனாகி மதுவுண் டவனின் நிலையானான் அண்டை நாட்டில் தனியாக யாரோ ஒருத்தி தோட்டத்திலே உண்டு மகிழ்ந்து இசைகேட்டே உயர்வார் நடனம் நாடகத்தை (153) கண்டு களித்தே இருக்கையிலே கன்னி யொருத்தி மண்டபத்தில் வண்டார் குழல்தன் பாதந் தொட வந்தே தோன்றி எனைப் பார்த்தாள் கண்டோ அமுதோ அவளதரம் கனியோ மதுரச் செம்பாகோ உண்டோ இலையோ எனச்சாற்றும் ஒளிசேர் மின்னல் இடையுடையாள் (154) பொன்னால் ஆன மண்டபத்தில் பொலியத் தோன்றி கண்வலையில் என்னைச் சிக்க வைத்துவிட்டே எங்கோ ஓடி மறைந்துவிட்டாள் மன்னும் அவளின் வடிவந்தனை மறக்க என்னால் முடியவில்லை மின்னோ பெண்ணோ தேவதையோ விளங்கா நிலையில் தவிககின்றேன் அங்கம் அங்க மாக அவள் அழகு தன்னை எடுத்துரைக்க பொங்கும் ஆசைக் களவில்லை புகல அறியேன் வார்த்தைகளை எங்கே சென்று அவைகற்பேன் ஏதம் நிறைந்த நிலையானேன் பங்க யப்பொன் அடினோவ பதைத்தே எனது மனம்நோவ 4 (155) (156)