{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் இதமா யெடுத்துக் கூறிடவே எனது தூதாய் ஏகிடுவீர் பொதியும் நாவல் பழம்போன்றும், பெண்கள் கரிய விழிபோன்றும் வதியும் வடியும் வண்ணமுமே 30 வாய்க்கப் பெற்ற வண்டுகளே
- நதியைக் கால்க ளாய்க்கொண்டீர்
நயந்தேன் நும்பால் விருந்தினன்யான்" (161) என்றான் வண்டால் தூதுசொல் யலா தென்னும் உண்மையினை நன்றே யறிந்த யூசருகு நலிக்கும் காதல் வசப்பட்டே பொன்றா அறிவை மழுக்குகின்ற போதைப் பொருள்கள் அனைத்தையுமே வென்றி கொள்ளும் தரத்ததன்றோ வேகம் நிறைந்த காதல்மது காதல் வெறியில் தூக்கமின்றிக் சன்னி அவள்பால் சென்றுசென்று மோதும் மனத்தை அடக்குகின்ற முறைமை யறியா நிலையினனாய் சீத உடம்பில் கொதிப்பேற சிந்தை யவளை நினைந்தயர ஏதும் செய்ய யியலானாய் இருந்தான் தோப்பில் யூசருகு கண்கள் தூக்கந் தனைமறப்பக் கருத்தைக் காதல் நினைவழுத்த வண்ண மலர்கள் உமிழ்கின்ற வாசம் மூக்கைத் துளைத்தெடுக்க தண்ணக் கதிரால் வானநிலா தழுவி யுடலைச் சுட்டெரிக்க எண்ண மெல்லாம் உமையிரத்தை எண்ணி யெண்ணிக் குமைந்திருக்க! ஆறுகால்கள் (162) (163) (164)