உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

38 பல்கீஸ் நாச்சியார் காவியம் எந்த வகையில் அடைவதிந்த எழிலார் மயிலை யெனநினைந்தே சிந்தை வருந்த யூசருகு தெளியா மனத்தைப் புயலாக்கி நொந்தே கிடந்தான் மதியிவனின் நொம்ப லத்தைக் கண்டிரங்கி அஞ்சி யோடி மறைந்ததுவே அவனைத் தூக்கம் தழுவியதே நறவம் சிந்தும் தோப்பினிலே நல்ல மலர்ப்பஞ் சணையின்மிசை பரவை போன்ற கண்படைத்த பாவை யர்கள் படுக்கவைக்க சிரம மின்றித் துயின்றிட்டான் திசைக ளெங்கும் ஒளிபரவ இரவின் ஆட்சி யகன்றேக எழுந்தான் கிழக்கில் சூரியனும் எண்சீர்சந்தவிருத்தம் மாலையிலே மேற்கடலில் படுத்த சூரியன் மாயமதாய்க் காலையிலே கீழ்க்கடல் தன்னில் கோலமிகு திரைந்துகிலை விலக்கி மெதுவாய்க் கோதறுநற் கதிர்க்கரங்கள் ஊன்றிச் சிவந்த ஞாலம்புகழ் ஒளிமுகத்தைக் காட்டிச் சிரசை நன்குயர்த்தி யெழுந்தனனே வனசம் சிரிக்க ஓலமிட்டே கடலரசி அரற்றி அலற (165) (166) உவப்புடனே வானமென்னும் பெண்ணாள்தழுவ வேகமுடன் ஆகாயத்தை எட்டிப் பிடித்தான் மிகக்கீழே இருந்தவன்பால் பதவி சேர்ந்ததும் மாகொடூரம் செய்வதுபோல் பரிதி வெயிலை வையமெங்கும் மிகவிரைந்தே பரப்பிட வானான் தோகைவிரித் தாடும்மயில் வாழுந் தோப்பினுள் சூரியனின் சதிரொளிதான் நுழையலா யிற்றே ஆகமீது வெயில்பரவ பூச ருகுதான் (167) அரியதுயில் சலைந்தெழுந்து நோக்கிட லானான் (168) 1 கடல்