உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் முகம்கழுவ ஓரிளம்பெண் பன்னீர் நல்கினாள் வேறொருத்தி பல்துலக்கக் குச்சியை யீந்தாள் அகமகிழக் குளிப்பதற்கு வருக என்றுமே அவன்கரத்தைப் பற்றியொரு கன்னி யிழுத்தாள் புகலரிய அழகுமிளிர் குளிய லறைக்குள் பிடித்திழுத்துக் கொண்டவள்தான் சென்றிட லானாள் தகவுடனே அங்குநின்ற கன்னியர் பல்லோர் தக்கபடி அவனைக்குளிப் பாட்டி முடித்தார் பட்டாடை அணிந்திடற்கீந் திட்டா ளொருத்தி பன்னீரிலே குளித்தஉடல் துடைத்தாள் ஒருத்தி தொட்டுடையை யுடுத்திவிட வந்தாள் ஒருத்தி சுடரணிகள் பூட்டிவிட லானாள் ஒருத்தி எட்டுத்திசை யும்மணக்கும் அத்தர் எடுத்தே இன்கரத்தால் இன்னொருத்தி பூசிட லானாள் மொட்டலர்ந்த மாலைதனைக் கழுத்தில் தரித்தே வேறொருத்தி காலிலணி சேர்த்துமே விட்டாள் மன்மதரே வருகவென ஆரத்தி சுற்றி வாழ்த்தொலித்து வெண்சாமரம் கொண்டு வீசியே அன்னநடைப் பெண்கள்சிலம் பார்த்தே யொலிக்க அங்கமதற் கேற்றபடி அபிநயம் செய்ய பொன்னணிசெய் கூடமொன்றில் யூச ருகினைப் பொலிவுறவே கூட்டிச்சென் றமர்ந்திட வைத்தார் மென்மையுள பஞ்சணைசேர் நாற்கா விதனில் பொருந்தவுடல் யூசருக மர்ந்திட லானான் வெள்ளியாவே ஆனமேசை தன்னில் உணவை விதவிதமாய் பரப்பினார்கள் தங்கத் தட்டிலே அள்ளியுண்ண மரகதத்தால் ஆன கரண்டி அமுதமென அறுசுவைசேர் பதார்த்த வகைகள் தெள்ளுதமிழ் இனிமையைப்போல் அருகி லிருந்தும் தீண்டமனம் நாடவில்லை யூசரு கிற்கு பள்ளந்தனை நாடியோடும் நீரினைப் போன்றே 37 (169) (170) (171) பாய்ந்தேயவன் கண்கள்யுமை யிரத்தைத் தேடின (172)