உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

88 பல்கீஸ் நாச்சியார் காவியம் கண்டுகொண்டார் அவன்நிலையைத் தோழியர் தாமே காதல்வய மான அவன் தனக்காய் இரங்கி விண்டெதுவும் கூறிடாமல் எதிரில் சுவரில் விளங்கும் நிலைக் கண்ணாடியைப் பார்க்கத் தூண்டினர் கொண்டலிடை முழுநிலவு தோன்றுதல் போலே கோதையுமையி ரத்தாள்முகம் தோன்றிய தாங்கே கண்ட அவன் கண்ணிமைக்க மறந்துமே போனான் கவிஞனாகி அவள்எழிலைப் பாடிட லானான் அறுசீர்ச்சந்தவிருத்தம் அமுதம் ஊறும் செவ்விதழே அரிய ரோஜாப் புதுமலரே குமுதப் பூவே சந்தனமே கோவை செய்யா நன்முத்தே (173) கமுகே கனியே நறுந்தேனே காதல் பிழம்பே அருகேவா சமமாய் அமர்வோம் உணவுண்போம் தனித்தே யிருந்து கதைபடிப்போம்" (174) என்றே பாடி எழுந்துசென்று எதிரே யிருந்த கண்ணாடியை நன்றே தொட்டுப் பற்றினனே நகையொலி கூடம் நிரம்பியதே f பொன்னார் காதல் வயமானோர் போக்கிற் சிவனொரு சான்றென்றே நின்றவோர் தோழி கூறினளே நெடுஞ்சிரிப் பின்னும் வலுத்ததுவே (175) தன்னின் தவற்றை யூசருகு சணத்தில் உணர லாகினனே முன்னம் ஆனால் அவன்பார்வை மேத்தளம் தன்னை நோக்கியதே அன்னம் என்ன உமையிரத்தாள் அங்கே நிற்கக் கண்டனனே உண்டாள் கண்ணால் அவள்இவனை உண்டான் இவன் அவள் உயர்எழிலை (176)