உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம்

  1. 1

வையம் காணாப் பேரழகி வாய்ப்பாள் நமக்கென் றேநினைத்தோம் பொய்யாய், கனவாய் ஆசைதனைப் போக்கு தற்கோ சுராயிக்கெனும் மேவு கின்றாள் நம்விதியை வெய்ய காம வெறியனிங்கே ஐயோ எவர்பால் உரைப்பதென அகத்துள் அழுதான் யூசருகு (185) அஞ்சு கின்றான் யூசருகென்(று) அறிந்த தாதிப் பெண்களெங்கள் "செஞ்சொல் அரசர் மிகநல்லார் சீற்ற மென்ப தேயறியார் மிஞ்சும் எழிலாள் உமையிரத்தை விரும்பு கின்றீர் என அறிந்து நெஞ்ச மகிழ்வோ டுமைக்காணும் நினைப்பில் இங்கு வருகின்றார் தெம்பாய் தெளிவாய் மாப்பிளையாத் திடமாய் பொலிவாய் இருப்பீ"ரென அம்பொற் பதித்த ஆசனத்தே அமர்த்தி பயத்தால் துளிர்த்திட்ட உம்பர் முகத்து வியர்வைதனை உலர்ந்த பட்டால் துடைத்தபடி செம்ம லர்க்கைச் சாமரத்தால் தென்றல் தோன்ற வீசினரே கன்னி மாட வாயிலினைக் கடந்து மனைவி பின்தொடர் மன்னு மரசன் கால்நடையாய் வந்தான் தனது பரிவாரம் என்னும் கூட்டம் மதிள்சுவருக்fகு] அப்பால் நிற்க எழில்நி றைந்த (186) 71871 பொன்னார் சோலை மலருகுக்கப் பொதும்ப ரிடையே குயிலிசைப்ப (188)