{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
42 பல்கீஸ் நாச்சியார் காவியம் ஆடும் மயில்கள் அரசிநல அழகு கண்டு நாணிநிற்க கூடு மாநம் மகள் தனக்கும் குமர னுக்குந் திருமணமென்(று) ஓடும் எண்ணப் பளுவழுத்த யூசரு கென்னும் காளையுள கூடம் அடைந்தான் மன்னவனும் கூட அடைந்தாள் அரசியுமே (189) களங்கம் இல்லா முழுமதியா காலை உதிக்கும் சூரியனா நிலமிது நாள்வரை கண்டறியா நித்திலம் இளைஞன் ஆனதுவா வலிமை மிக்க இளஞ்சிங்கம் வந்துநம் எதிரில் உள்ளதுவா முழங்கு கடல்சூழ் இவ்வுலகம் முற்றும் சென்று தேடிடினும் (190) யாரே கிடைப்பார் இவனைப்போல் எவரே இவனுக் கிணையாவாரி கூற வொண்ணா அழகுநலம் கொண்ட இவனே நம்மகளை ஆரம் சூடி மணம்புரிய அருகன் என்று மதித்தவனாய் ஈரம் தோய்ந்த நினைப்புடனே எழில்சேர் தனது விழிகளினால் மன்னன் அரசி தனைப்பார்த்தான் மகளை மணக்கும் வாலிபனை தன்னை மறந்தே பார்த்துநின்றாள் தகைசால் அரசி இமையாளாய் மன்னர் இவரா நாம்தவறாய் என்னே நமது பிள்ளைமதி வருவான் சுறாயிக் கெனநினைத்தோம் என்றே நினைத்த யூசருகு (191) (192)