பக்கம்:பல்சுவை விருந்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 97

என்காதல் ராணியே! கன்னிப் பெண்ணின் கர்வத்தோடு நீ

உலகினை

உலாவருவதை உற்றுப் பார்த்திட விஞ்ஞானிகளின் விழிகளெல்லாம் விண் நோக்கிய வண்ணமே வீற்றிருக்கின்றன. சித்திரை மாதத்தில் நீ எங்கள் மனத்தில் பதித்த இந்த மகிழ்ச்சி முத்திரையை நான் எப்படி மறந்துவிட முடியும்? தாவணி சிறகசைக்கும் பருவப் பெண்ணின் பூரிப்போடு நீ பறந்து சென்றதைப் பார்த்த ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆண்மை

அதிகரித்தது.

வெறும் துணிக்கடை பதுமைகளாய் பவனிவரும் கன்னிப் பெண்களை எப்படி நான் காதலிக்க முடியும்? எனவே தான்