பக்கம்:பல்சுவை விருந்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் ii. 1

ரணப்படுவதைக் கண்டு

கண்ணி உகுத்தது

என் இதயம். என்கின்றார். அப்போது எதிர் பிளாட்பாரத்தில் போலீஸ்காரர் ஒருவர் வந்து மாமூல்' வாங்கிப் போகின்றார். கவிஞர் கூறுகின்றார்:

போனது

போலீஸ்காரர்

மட்டுந் தானா?

தோளோடு

தோள் இணைந்து நீதியும்

நெடும் பயணம் போனது

அவரோடு! இப்படி இத்தொழில் எத்தனையோ பேருக்குப் படி அளக்கின்றது!

"வெட்ட வெளியில் இப்படி

மறைவே இல்லாத

இந்த இடத்திற்கு வர

வெட்கப் படுவதில்லையா

அந்தப் பெண்கள்?” என்ற வினாவைத் துறவி விடுக்க அதற்குப் புரோக்கர் துரைக் கண்ணு தரும் மறுமொழி:

“கல்லூரி மாணவனிலிருந்து

அலுவலக

ஆபீஸர்கள் வரை

இந்த

அசிங்கத்தைத் தேடி

ஆசையோடு வரும்போது

வயிற்றின் கேள்விகளுக்கு

விடைகள் தேடும்

எங்களுக்கு

எதற்கு சார்