பக்கம்:பல்சுவை விருந்து.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாமை நிலை 123

களால் வழங்கப்பெறும். அவை காசநோய், சளிக் காய்ச்சல் வகை, மற்ற மூச்சுக் குழல் ஒவ்வாமை நிலைகளை ஏற்படுத்தும் பொருள்கள் வீட்டுத் தூசு, காளான் வகை இலைகள் (Mould spore) பூம்துகள் (மகர்ந்தம்), தலைப் பொடுகு (Dandruff), வீட்டுச் செல்லப் பிராணிகளின் மயிர் முதலியவையாகும். இவை தவிர சில வகை உணவுகள், மருந்துகள், ஆல்கஹால், புகையிலை, நாய்கள், பூனைகள், முதலியவை சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கும். உணவுப் பொருள்களில் சாக்கோலட், பசும்பால், முட்டை, கோதுமை, சில கடல் உணவுகள் (குறிப் பாக கிளிஞ்சல்) ஆகியவை அடங்கும். இவை யாவும் உடல் - வேதியியல் சரியாகச் செயற்படாமையால் விளைகின்றன. நரம்புக் கோள்ாறுகள் உள்ளவர்களிடம் இது அதிகமாக நேரிடுகின்றது. அடிக்கடி இந்நோய் தொடர்ந்து ஏற்படுவதாலும் சிலரிடம் நரம்புக் கோளாறும் நேரிடுகின்றது. ஆய்வாளர்கள் இஃது இரண்டுவித ஓங்கி நிற்கும் ஜீன்களால் உண்டாகின்றது என்றும், இவற்றின் இரட்டைச் சேர்க்கை பூப்பு (Puberty) அடைவதற்கு முன்னதாகக் கடுமையாக ஏற்படுகின்றதென்றும் ஒற்றை ஜீன் பூப்புக்குப் பிறகு தீவிரமற்ற நிலைமையை உண்டாக்குகின்றதென்றும் கூறுகின்றனர்.

தொடக்க கால மனிதர்கள் ஒருவேளை ஒவ்வாமை நிலைமைகளைப் பெற்றிருத்தல் கூடும்; அவை இன்றும் சில பிராணிகளிடமும் மனிதர்களிடமும் நிலை பெற்றுள்ளன. 1900 வரையிலும் மருத்துவர்கள் ஒவ்வாத நிலைகளின் திட்ட வட்ட மான காரணங்களையும் அவற்றின் சிறப்பியல்புகளைப் பற்றி யும் தெரிந்து கொள்ளத் தொடங்கவில்லை. ஆனால் இன்று ஒவ்வாத நிலை என்பதை மருத்துவத்தில் ஒருவித சிறப்புத் துறை யாகக் குறிப்பிடப் பெறுகின்றது. ஒவ்வாத நிலை நோய்களைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒவ்வாமை நிலை மருத்துவர் (Allergist) என்றும் குறிக்கப் பெறுகின்றார்.

ஒவ்வாமை நிலை வளர்ச்சி பெறும் போக்கு: ஒவ்வாமை நிலையிலுள்ள மனிதரின் உடல் ஒவ்வாமை நிலையை