பக்கம்:பல்சுவை விருந்து.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i28 பல்சுவை விருந்து

ஒவ்வாமை மருத்துவர் நோயாளியின் உடலைச் சோதித்து அறிகுறிகளை உறுதி செய்து நோயின் இருப்பைக் கண்டறி கின்றார். கவனமான கட்டுப்பாட்டுக்குள் அடங்கின சோதனை களை மேற் கொண்டு தொந்தரவை உண்டாக்கும் ஒவ்வாமைப் பொருள் இன்னதென்பதை இனம் காண்கின்றார். ஒவ்வாமை மருத்துவர் சாதாரணமாக ஒவ்வாமையாகவுள்ள பொருள் களைச் சிறிய அளவுகளில் தனித்தனியான பகுதிகளில் தோலின் அடியில் குத்திப் புகுத்துகின்றார். நோயாளிக்கு ஒவ்வாத பொருள்கள் குத்திப் புகுத்தின இடத்தில் தோல் சிவக்கவும் சற்று வீக்கம் விளைவிப்பதையும் காண்கின்றார். இந்த முறை நோயா ளிக்கு யாதொரு நலக் குறையையும் விளைவிப்பதில்லை; சிவந்த நிறமும் வீக்கமும் விரைவில் மறைகின்றன.

அடுத்து. ஒவ்வாமை மருத்துவர் தாம் மேற்கொண்ட ஒவ்வொரு தோல் சோதனையின் முடிவுகளை தம்முடைய நோயாளிகளின் உடல் சோதனையின் முடிவுகளுடனும் ஒப்பிடுகின்றார். தோல் சோதனைகள் திட்டமான விடைகளை எப்பொழுதுமே தருவதில்லை; ஆனால் அவை ஒவ்வாமைப் பொருள்களை இனங் கண்டறியத் துணை புரிகின்றன. குருதிச் சோதனைகளும் நோயாளியின் மூக்குச் சளியின் மாதிரிகளின் சோதனைகளும் நோயைக் கண்டறிவதில் துணை புரிகின்றன.

தோல்சோதனைகள் உணவு ஒவ்வாமையைக் கண்டறிவ தற்குப் பயன்படுவதில்லை. காரணம், உணவு ஏற்றுக் கொண்ட பின் செரிமானம் ஆகும் நிலையில்தான் அது ஒவ்வாமை எதிர் வினைகளை விளைவிக்கின்றது. இத்தகைய உணவு ஒவ்வா மையைக் கண்டறிவதற்கு ஒவ்வாமை மருத்துவர் தம் நோயாளி யைக் கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்துகின்றார். மருத்துவர் நோயாளியின் உணவினின்றும் சாதாரணமாக ஒவ்வாமை எதிர்வினைகளை விளைவிக்கும் எல்லா உணவுப் பொருள்களையும் நீக்குகின்றார். இந்த முறை அறிகுறிகளை நீக்கலாம். இது சரியாக அமைந்தால் நோயாளியின் உணவில் நீக்கிய உணவுப் பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கின்றார்.