பக்கம்:பல்சுவை விருந்து.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 141.

4. இலக்கிய வரலாறு பேச்சு வழக்கிலுள்ள இந்திய மொழிகளில் தமிழ் மிகப் பழமையானது மிகப் பழைய இலக்கியச் செல்வத்தையும் கொண்டது. ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியை இம் மொழியில் காணலாம். தமிழ் இலக்கிய வரலாற்றை அமைக்கும்போது சங்க இலக்கியம், நீதி நூல் இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கி யங்கள், பலவகை சிற்றிலக்கியங்கள், காப்பியங்கள், சமய நூல்கள், மணிப் பிரவாள இலக்கியங்கள், சதகம் முதலியன இஸ்லாம் கிறித்தவம் தந்த இலக்கியங்கள், வெளி நாட்டார் தந்த இலக்கியங்கள், நாடகம், கட்டுரை, சிறுகதை, புதின இலக்கி யங்கள், இக்காலப் பாட்டிலக்கியம், புதிய பாணியில் எழுந்து பறந்து வரும் புதுக்கவிதை போன்ற இலக்கிய வளர்ச்சி முறை கள் ஆகியவை இந்த வரலாற்றில் இடம் பெறுதல் வேண்டும். இந்த வரலாற்று ஆசிரியர் விருப்பு வெறுப்பின்றி, சமயக் காழ்ப்பின்றி, பொது நோக்கில் ஆராய்ச்சிப் பாணியில் நூலை அமைக்க வேண்டும். உரைநடை இலக்கியம் காலந்தோறும், வளர்ந்த வரலாற்றை ஆங்காங்குச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்த வரலாற்றை இவ்வாறு அமைக்கலாம்: பழங்காலம்: இதில் சங்க இலக்கியம் கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையில் உள்ள அகம்புறம் பற்றிய பாடல்கள். நீதி இலக் கியம் கி.பி 100 முதல் கி.பி. 500 வரையில் எழுந்த திருக்குறள் முதலிய நீதி நூல்கள் கார் நாற்பது முதலிய வெண்பா நூல்கள். பழைய காப்பியங்கள் - இப்பகுப்பில் சிலப்பதிகாரம் மணிமேகலை முத் தொள்ளாயிரம் முதலியன இடம் பெறலாம். இடைக்காலம்: பக்தி இலக்கியம் கி.பி. 600 முதல் 80 வரையில் நாயன்மார், ஆழ்வார் பாடல்கள் கலம்பகம் முதலிய பலவகை நூல்கள் காப்பிய இலக்கியம், கி.பி. 900 முதல் 1200 வரையில், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய சமண பெளத்த நூல்கள், இறையனார் களவியல் முதலிய இலக்கண

ப.க - 11